கால் மேல் கால் போடும் காலம்.. சரியான முடிவெடுத்தா ராஜாதான்.. சிம்ம ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி பலன்
சென்னை; 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
ஜோதிடத்தில் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு பெரிய பலம் சனிக்கு உண்டு. அது சிறு நகர்வு. சனியின் சிறு நகர்வும் கூட ஒருவரின் வாழ்க்கையை புரட்டி போடும் குணம் கொண்டது. சனி ஒருவரை தூக்கி வளர்க்கவும் செய்யும்.. தூக்கி மிதிக்கவும் செய்யும்.

சனி எந்த திசையில் செல்கிறார் .. உங்கள் ராசிக்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்து உங்களின் வாழ்க்கை மேலே போக போகிறதா கீழே வீழ போகிறதா என்று பார்த்து விடலாம். சனியின் மூலம் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள், வீழ்ந்தவர்களுக்கு இருக்கிறார்கள். அப்படி பட்ட சனிதான் தற்போது வக்ர பெயர்ச்சி அடைகிறார் .
அது என்ன வக்ர பெயர்ச்சி: அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள். தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார்.
இவர்தான் இந்த முறை வக்கிர பெயர்ச்சி அடைய போகிறார். கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.
பலன்கள்; 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம். அடுத்த 1 வருடம் உங்கள் வாழ்க்கையில் சனி என்னவெல்லாம் செய்ய போகிறார் என்று பார்க்கலாம்.
நல்ல பலன்கள்; உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும்.
எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.
மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெரிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது.
புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும். சரியான முடிவுகளை எடுத்தால் கால் மேல் கால் போட்டு அமரலாம்.
கெடு பலன்கள்; கடன் வேண்டாம் - கெட்ட எண்ணம் வேண்டாம்: அதீத பணம் வருகிறது என்று நம்பி கடன் வாங்க வேண்டாம். கடன் பிரச்சனைகளில் மாட்டி சிக்க வேண்டாம். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட எண்ணம் வேண்டாம். யாரையும் பற்றி தவறாக யாரிடமும் பேச வேண்டும்.
மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். கொஞ்சம் வாயை குறைத்துக்கொள்ளுங்கள் சிம்ம ராசிக்காரர்களே!
பரிகாரம்: தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் சென்று பூஜை செய்யுங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications