Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020-21 - மிதுனம் ராசிக்கு அஷ்டம சனி, குருவால் பாதிப்பு வருமா?

விகாரி தமிழ் வருடம் முடியப்போகிறது சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிய தமிழ் புத்தாண்டில் நமக்கு நல்லது நடக்குமா? வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும் மிதுனம் ராசிக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.

மிதுனம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் 11 ஆம் வீடான லாப ஸ்தானமான மேஷம் ராசியில் தொடங்கி 10ஆம் வீடான தொழில் ஸ்தானமான மீனம் ராசி வரைக்கும் 12 மாதங்களில் சஞ்சரிப்பார். குரு பகவான் ஏழாம் வீடான தனுசுவில் இருந்து அதிசாரமாக எட்டாம் வீடான மகரம் ராசிக்கும் பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கும் நேர்கதியில் மகரம் ராசிக்கும் பயணிக்கிறார். இந்த ஆண்டு 7,8,9 ஆம் வீடுகளில் குரு செல்கிறார். சனிபகவான் எட்டாம் வீட்டிலும் ராகு உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். ஆவணி மாதம் இடப்பெயர்ச்சியாகி விரைய ஸ்தானத்திற்கு செல்கிறார். கேது பகவான் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு செல்கிறார். இந்த சார்வரி புத்தாண்டில் மிதுனம் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்புகள் என்ன நடைபெறும் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான். சொந்த ஜாதகம், தசாபுத்தியை பொருத்து பலன்கள் மாறுபடும்.

அஷ்டம சனி குரு

அஷ்டம சனி குரு

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி புத்தாண்டின் தொடக்கத்தில் எட்டாம் வீட்டில் சனியும் குருவும் சேர்ந்து சங்கடங்களை தருவாரோ என்று பயப்பட வேண்டாம். குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைக்கிறது. குடும்பம் குதூகலமாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். புதிய வேலை கிடைக்கும். சந்தோஷம் படிப்படியாக அதிகரிக்கும் என்றாலும் எட்டாம் வீட்டில் இருக்கும் சனி சங்டங்களை தருவார். பேச்சில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் சனிபகவான் அலைச்சலை ஏற்படுத்தி விடுவார்.

பேச்சில் நிதானம்

பேச்சில் நிதானம்

மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு படிப்பில் கவனமாக இருங்க. ஆர்வம் குறைவது போல இருக்கும் எனவே நண்பர்கள் வட்டத்தில் கவனமாக இருங்க. எதிர்பாலின நட்புக்களிடம் கவனமாக இருங்க இல்லாவிட்டால் செய்யாத தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். உங்க ராசிக்கு இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தை சனி, குரு பார்வையிடுவதால் வாக்கில் கவனமாக இருங்க.

விட்டுக்கொடுத்து போங்க

விட்டுக்கொடுத்து போங்க

கண்டச்சனியால் கணவன் மனைவி பிரச்சினை இருப்பவர்கள் கொஞ்சமாவது விட்டுக்கொடுத்து போங்க. நீ பெரிதா நான் பெரிதா என்று மல்லுக்கு நிக்காதீங்க விரிதான் அதிகமாகும். காரணம் அஷ்டம சனி ஆட்டித்தான் வைப்பார். சனியோட பார்வையும் சரியில்லை. எனவே நீங்க பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பேசும் வார்த்தைகளை கவனமாக பேசுங்க. பிரச்சினைகள் எதையும் நிதானமாக கையாளுங்கள்.

முதலீடுகளில் கவனம்

முதலீடுகளில் கவனம்

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புதிய உறவுகள் ஏற்படும். கல்யாண பேச்சுவார்த்தை நடைபெறும் போது உங்க வார்த்தைகள்தான் சிக்கலை ஏற்படுத்தும். படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு தடை தாமதங்களினால் பிரச்சினைகள் ஏற்படும். இன்டர்வியூவில நல்லா பேசுங்க. கேள்விக்கு பதில் சொல்லுங்க. தெளிவாக பேசினால் மட்டுமே வேலை கிடைக்கும். கடின உழைப்பு அவசியம். உங்களுக்கு வங்கிக்கடன் கிடைக்கும். அதே நேரம் நிறைய கடன் வாங்காதீங்க. அதிக முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.

வேலையில் கவனம்

வேலையில் கவனம்

குடும்ப தலைவிகளுக்கு நிறைய சவால்கள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் நிறைய சண்டைகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து போங்க. கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் மட்டுமே உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யாதீர்கள் பிரச்சினையில் கொண்டுபோய் விட்டு விடும். வேலைக்கு போகும் பெண்கள் சோம்பேறித்தனத்தை விட்டு விட்டு கொடுத்த வேலைகளை தெளிவாக செய்யுங்கள்.

செலவு அதிகம்

செலவு அதிகம்

உங்க ராசியில் இருக்கிற ராகு, அஷ்டமத்து சனி அஷ்டமத்து குரு ஆட்டி படைக்கும். ஆவணி மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கு செல்கிறார். கேது ஆறாம் வீட்டிற்கு வருகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இல்லாவிட்டால் சிக்கல்தான். மொத்தத்தில் இந்த ஆண்டு வருமானத்தை விட செலவுதான் அதிகம் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு பண்ணுங்க. கொஞ்சமாவது சேமியுங்கள் கஷ்டங்கள் குறையும். நெருக்கடிகள் தீரும் வருமானம் அதிகமாகும்.

பலன் தரும் பரிகாரங்கள்

பலன் தரும் பரிகாரங்கள்

இந்த ஆண்டு என்ன பலன்கள் இப்படி இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். இது பொதுவான பலன்தான். உங்க சொந்த ஜாதகத்தில் தசாபுத்தி பலன்கள் சரியாக இருந்தால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும். பாதிப்பு என்று ஒன்று இருந்தால் பரிகாரம் என்று ஒரு இருக்கும்தானே. இந்த ஆண்டில் நீங்கள் பாதிப்புகள் நீங்க குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க. என்ன பிரச்சினை என்றாலும் குல தெய்வத்தை மறக்காதீங்க. புதன்பகவானுக்கு உகந்த புதன்கிழமைகளில் நீங்க காரம்பசுவிற்கு பூஜை செய்யுங்கள். பாசிப்பருப்பு, வெல்லம், அகத்திக்கீரை கொடுங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+