தன்வந்திரி பீடத்தில் சங்கடம் தீர்த்து சந்ததி தரும் சத்ரு சம்ஹார ஹோமம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் வருகிற 23ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஷஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெறவுள்ளது.

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் சத்ரு உபாதைகள் அகலவும் இந்த யாகம் செய்யப்படுகிறது.

பொதுவாக ஹோமங்கள் என்பது இழந்த ஒன்றைத் திரும்பப் பெறுவதற்கும், முறையாக வர வேண்டியதை மீண்டும் பெறுவதற்கும் மற்றும் திருமணம், குழந்தைப்பேறு, உத்தியோக வாய்ப்பு, மன மகிழ்ச்சி, குடும்ப க்ஷேமம், குழந்தைகளின் கல்வி, போன்ற பல காரணங்களை முன்னிலைப்படுத்திச் செய்யப்படுகின்றன.

தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை ஆகி இருக்கும் 75 விக்கிரங்கள் அனைத்தும் புன்னகையுடன் இருப்பதைப் பார்த்துப் பலரும் ஆச்சரியாகக் கேட்கிறார்கள். சாந்நித்தியம் மிகுந்துள்ள இந்த பீடத்தில் இல்லாத கடவுளர்.
திருவுருவங்களே இல்லை எனலாம்.

ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர்

ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர்

ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனரை வணங்கி விட்டு, அவருக்கு உண்டான ஹோமத்தை சிரத்தையோடு செய்தால், காணாமல் போன பொருட்கள், இழந்த சொத்துக்கள், கிடைக்காமல் போன நியாயங்கள் மீண்டும் கிடைக்கும். நெடுநாட்களாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்வார்கள். நம்பிக்கையோடு இங்கு வந்து எத்தனையோ அன்பர்கள் அந்த ஹோமம் செய்து பலன் பெற்றிருக்கிறார்கள்.

சஷ்டியின் சிறப்பு நோய்கள் தீர விரதம்

சஷ்டியின் சிறப்பு நோய்கள் தீர விரதம்

விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும்.அவை முறையே சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்த விரதம் சஷ்டி விரதமேயாகும். இரத்த சம்பந்தமான நோய்கள் அகலவும், எதிரிகள் விலகவும் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், குழந்தை பாக்யம் கிடைக்கவும் ,வேலைவாய்ப்பு அமையவும், கடன் தொல்லை நீங்கவும் மேற்கண்ட யாகம் நடைபெறவுள்ளது.

சஷ்டி விரத பலன்

சஷ்டி விரத பலன்

"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த யாகமாகும். மேலும் விரும்பிய பலனைப் பெறலாம். கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள். பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.

சஷ்டி நாளில் ஹோமம்

சஷ்டி நாளில் ஹோமம்

பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக்குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில் கார்த்திகை குமரன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்களை செய்து வருகிறார்.

உடல், மன நோய் தீரும்

உடல், மன நோய் தீரும்

வருகிற 23.01.2018 ஷஷ்டியை முன்னிட்டு முருகருக்கு உரிய நாளான செவ்வாய்க் கிழமை நடைபெறும் சத்ரு ஸம்ஹார ஹோமத்திலும், தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையிலும், அபிஷேகத்திலும், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்தும் சத்ரு உபாதைகளில் இருந்தும் நிவாரணம் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sri Shatru Samhara Homam to Make your Enemies Surrender to you for attaining triumphing over them at danvantri temple in walajapet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற