• search

கந்த ஷஷ்டி 2018: உடல் ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாட்கள் - விரத பலன்கள்

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சென்னை: முருகப்பெருமானுக்காக வைகாசி விசாகம், கார்த்திகை விழா என பல விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி விழா இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நாளை தொடங்குகிறது.

  ஐப்பசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் திருச்செந்தூரின் தேவ சேனாதிபதி முருகனுக்கும் சூரனுக்கும் இடையே நிகழ்ந்த போரில் சூரனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றார் முருகன். இதனை போற்றும் விதமாக இன்றைக்கும் 6 நாட்கள் விரதம் இருந்து மக்கள் சஷ்டி விரதம் அனுசரித்து கந்த சஷ்டி விழாவை கொண்டாடுகின்றனர்.

  உலகில் மிகச்சிறந்த மருந்துவர் உங்கள் உடல். உலகில் மிகச்சிறந்த மருத்துவம் உண்ணாநோன்பு எனவேதான் உண்ணா நோன்பை வைத்து உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துள்ளனர் நம் முன்னோர்கள். நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் 'கந்த சஷ்டி விழா'.

  Skanda Sashti 2018: Benefits of Sashti Viratham

  கந்த சஷ்டி விரதம்

  வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும். உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்தி ஓய்வெடுக்கும். எனவே செரிமான சக்தியும், இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது. உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

  ஆறுமுகனுக்காக ஆறு நாட்கள் விரதம்

  'செரிமான சக்தி' தான் 'முருகனின் தாய் பார்வதி. 'நோய் எதிர்ப்பு சக்தி' தான் 'முருகன்'. 'நோய்' தான் 'அரக்கன்'. வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது. இந்த விழாவில் எப்படி 'முருகப்பெருமான்' தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள 'நோய் எதிர்ப்பு சக்தி' தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.

  நோய் எதிர்ப்பு சக்தி

  வெளியில் முருகனுக்கும்,அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும். எப்படி ஒவ்வொரு நாளும் 'முருகன்' சக்தி பெற்று ஆறாவது நாள் அசூரனை வதம் செய்கிராறோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது 'நோய் எதிர்ப்பு சக்தி' வலிமையடைந்து 'டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள்' இருந்தாலும் வதம் செய்துவிடும்.

  என்ன சாப்பிடலாம்

  உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் 'உண்ணா நோன்புடன்' அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள். ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம். ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம். ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம். இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம். வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.

  ஆறு நாட்கள் ஓய்வு

  எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம். நீரிழிவு நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

  நன்மைகள் என்ன

  ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம். சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம். மலம் கருப்பாக வெளியேறலாம். சளி வெளியேறலாம். உடல் ஓய்வு கேட்கலாம். காய்ச்சல் வரலாம். வலிகளை உணரலாம். அதிக உடல் எடை சீராகும், முகம் பொழிவு பெறும். கண்ணில் ஒளி வீசும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். இரத்தம் தூய்மை பெறும். தோலின் நிறம் சீராகும். மன உளைச்சல் குறையும், கவலை, பயம், கோபம் குறையும். புத்துணர்வு கிடைக்கும். உடல் பலம் பெறும். மனம் அமைதி பெறும். ஆழ்ந்த தூக்கம் வரும். கந்தன் அரக்கனை சம்ஹாரம் செய்வது போல் உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  Sashti viratam or fasting is dedicated to the Hindu God Muruga, also known as Skanda, Kanda, Karthik and Shanmuga. Fasting is practiced by abstaining from food for 24 hours beginning from one sunrise to the other of the next day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more