சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வீடு தேடி வரும் கோடீஸ்வர யோகம்..திடீர் ஜாக்பாட் யாருக்கு?
சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறது. நினைத்த காரியங்கள் நிறைவேறப்போகிறது. சுப காரியங்கள், நன்மை தரக்கூடிய காரியங்கள் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிகழப்போகிறது. சனி, குரு, ராகு கேது ஆகிய நான்கு ராஜ கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் பயணத்தால் தனுசு, மகரம், கும்பம்,மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு சோபகிருது ஆண்டில் என்னென்ன நன்மைகள் நடைபெறப்போகிறது என்று பார்க்கலாம்.
சோபகிருது என்றால் மங்கலகரமான செயல்களை செய்யக்கூடிய ஆண்டு. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகலவிதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டில் நிறைய மங்கலகரமான செயல்கள் அதிகம் நடைபெறும்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்வார். ராகு பகவான் ஐப்பசி மாதம் வரை மேஷ ராசியிலும் கேது பகவான் ஐப்பசி மாதம் வரை துலாம் ராசியில் பயணம் செய்வார். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.
நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சியாகும் சோபகிருது புத்தாண்டில் பல சுப காரியங்கள் நிகழப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும்? தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பண வருமானம் அதிகரிக்கும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பார்க்கலாம். என்று பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு யோகங்களும் வாழ்க்கையை புரட்டி போடப்போகும் மாற்றங்களும் நடைபெறப்போகிறது. குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே..உங்களுடைய பொருளாதார வளம் சிறப்படையும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. கடன் பிரச்சினைகள் நீங்கப்போகிறது. இல்லத்திலும் உள்ளத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியை தரப்போகிறது. குரு ராகுவின் சேர்க்கை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலைச்சுமை நீங்கும். கர்ப்பிணிகள் கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. தனுசு ராசிக்காரர்களுக்கு நாடாளும் யோகம் தேடி வரப்போகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புத்திரபாக்கியம் கைகூடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. பண பிரச்சினைகள் நீங்கும். ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வர சகல நன்மைகளும் அதிகரிக்கும். காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட திருஷ்டி பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..யாரை நம்பியும் பணத்தை கொடுக்காதீர்கள். கடன் பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் உங்களுக்கு குரு பகவான் பொருளாதார வளத்தை தரப்போகிறார். சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் உங்களுக்கு நிறைய சுகங்களை தரப்போகிறார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார வளம் அதிகரிக்கும். வீடு, வாகன சேர்க்கை ஏற்படப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தேடி தேடி பணம் வரும். ராகு பகவான் மூன்றாம் வீட்டிற்கு வரப்போகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு வருகிறார். இளையசகோதரர்கள் வகையில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. பேசும் போது கவனமாக யோசித்து பேசுவது அவசியம் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். குடும்பத்தோடு ஆன்மீக பயணம் சென்று வருவீர்கள். கடந்த சில ஆண்டுகாலமாகவே இருக்கும் உடல் நல பிரச்சினைகள், குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கப்போகிறது. மொத்தத்தில் மகர ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு அற்புதமான மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரப்போகும் தமிழ் புத்தாண்டாக அமைந்துள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. எத்தனையோ இடர்பாடுகள், துன்பங்கள் துயரங்களை தாங்கிக்கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். தாய் வழி சொத்துக்கள் தேடி வரப்போகிறது. மிகவும் அற்புதமான ஆண்டாக உள்ளது என்றாலும் பண விவகாரங்களில் கவனம் தேவை. முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். வீண் ஆடம்பரம் உங்களுக்கு வீண் செலவுகளை இழுத்து விட்டு விடும். கண் திருஷ்டி அதிகமாகும் கவனமாக இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகளிலும் தெளிவு தேவை. நீங்கள் எதையாவது பேச அதை கேட்பவர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கிறது. வேலை தொழிலில் இடமாற்றம் ஏற்படும். குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் ராகு வரப்போவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நகை சேர்க்கை அதிகரிக்கும். நிறைய நகை வாங்குவீர்கள். மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழுங்கள். நரம்பு பிரச்சினைகள் வரலாம். பிள்ளையார்பட்டியில் அருள்பாலிக்கும் கற்பக விநாயகரை வணங்குவது நல்லது. நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. மலைபோல் வந்த பிரச்சினை பனி போல விலகும். சோபகிருது புத்தாண்டில் நல்லதே நடக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. குரு பகவான் இரண்டாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். ஏழரை சனி உங்களுக்கு பல படிப்பினைகளை தரப்போகிறது. குடும்ப ஸ்தானத்தில் குருவும் ராகுவும் இணைவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பொருளாதார வளம் நன்றாக இருக்கும். பார்க்கும் இடம் எங்கும் பணம் வரும். தேடிப்போகும் திசை எங்கும் நல்லது நடக்கும். சனிபகவான் 12ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகளை நினைத்து கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். சஞ்சலங்கள் உங்களை சங்கடப்படுத்தும் அதுவே உங்கள் தூக்கத்தை கெடுக்கும். வருவது வரட்டும் நடப்பது நடக்கட்டும் என்று எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள். எதிரிகள் எட்டு திசையிலும் தெறித்து ஓடுவார்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராகு பகவான் உங்கள் ராசிக்கு வரப்போகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் வரும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். படித்து முடித்து விட்டு காத்திருப்பவர்களுக்கு வேலை வீடு தேடி வரும். இந்த ஆண்டில் மதுரை மீனாட்சியை வணங்க நன்மைகள் நடைபெறும். கண் திருஷ்டி கரைய கல் உப்பு பரிகாரம் செய்யுங்கள் அவ்வப்போது திருஷ்டி சுற்றி போடுவது அவசியம். கண்களால் மக்களை காப்பது போல அன்னை மீனாட்சி உங்களை காத்து ரட்சிப்பாள். சோபகிருது புத்தாண்டில் தீயவை குறைந்து நல்லவைகள் அதிகம் நடைபெறும் என நம்புங்கள்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications