For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்திர கிரகணத்தில் கோவில்களை மூடும் போது காளஸ்ஹஸ்தியில் மட்டும் சிறப்பு பூஜை ஏன்?

சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ள நிலையில் கோவில்கள் அனைத்தும் 10 மணிநேரத்திற்கு மேல் மூடப்பட உள்ளன. அதே நேரத்தில் ஆந்திரா மாநிலம் காளகஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெ

Google Oneindia Tamil News

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை 12 மணி நேரம் மூடப்படஉள்ளது. நாடுமுழுவதும் கோவில்கள் மூடப்படும் போது ராகு கேது பரிகார தலமான காளஹஸ்தியில் மட்டும் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரகணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.

ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இணைவதை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும்.

சந்திரன் சூரியன் கேது

சந்திரன் சூரியன் கேது

சந்திர கிரகணம் ஏற்படும் பௌர்ணமி நாளில் சந்திரன்-கேது இணைந்திருக்க, சூரியன்-கேது சம சப்தம ராசியில் நின்று கொண்டிருக்கும். நாளைய தினம் சந்திர கிரகணம் நிகழ உள்ள நாளில் மகர ராசியில் சந்திரன், கேது அமர்ந்திருக்க கடகத்தில் சூரியன் ராகு அமர்ந்துள்ளனர்.

எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரகணம் நிகழும் என கூறியுள்ளனர்.

கோவில்கள் நடை மூடல்

கோவில்கள் நடை மூடல்

நாளை வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணி முதல் சனிக்கிழமை காலை 3.49 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. கிரகண காலங்களில் 6 மணி நேரத்துக்கு முன் திருமலை ஏழுமலையான் கோவில் மூடப்படுவது வழக்கம். அதன்படி, நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 4.15 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது. கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

அனைத்து சேவைகளும் ரத்து

அனைத்து சேவைகளும் ரத்து

இதையொட்டி நாளை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளையும், பவுர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் நாளை மறுநாள் காலை நடைபெறும் சுப்ரவாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தனஸ்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் நடைமூடப்படுகிறது.

 பக்தர்களுக்கு வசதி

பக்தர்களுக்கு வசதி

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் 12 மணி நேரம் மூடப்பட உள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதியில் செயல்பட்டு வரும் அன்னதான கவுன்ட்டர்களும் நாளை மாலை 5 மணி முதல் சனிக்கிழமை காலை 9 மணி வரை மூடப்பட உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை பக்தர்களுக்கு புளியோதரை, தக்காளி சாத பொட்டலங்களை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

காளகஸ்தீஸ்வரர் ஆலயம்

காளகஸ்தீஸ்வரர் ஆலயம்

கிரகணத்தின் போது காளஹஸ்தி கோவிலை மட்டும் மூட மாட்டார்கள். இதற்கு காரணம், இந்தியாவிலேயே இங்கே மட்டும் தான் ராகுவுக்கும் கேதுவுக்கும் பூஜை நடக்கிறது. அதனால் இங்கே கிரகணங்களின் தாக்கம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. எனவேதான் நாளைய தினம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற உள்ளது.

English summary
While all temples across the country remained closed on Friday for lunar eclipse, the famous Sri Kalahasti temple remain open
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X