ஒன்றல்ல.. இரட்டை பெயர்ச்சி நடக்குது! அதிபதி ஆகும் காலம்.. காற்றாற்று வெள்ளமாக சீறப்போகும் கடக ராசி
சென்னை: சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் இரட்டை பெயர்ச்சி அடைய உள்ளார். அதாவது ஒரு நாளில் ஒரு பெயர்ச்சி மேற்கொண்டு அடுத்த சில நாளில் இன்னொரு பெயர்ச்சி மேற்கொள்வதுதான் இரட்டை பெயர்ச்சி ஆகும். டிசம்பர் 2ம் தேதி 12.05 மணிக்கு சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார்.

டிசம்பர் 28, 2024 சனிக்கிழமையன்று சுக்கிரன் மீண்டும் பெயர்ச்சி செய்கிறார். அதாவது இந்த பெயர்ச்சி இரட்டை பெயர்ச்சி. கும்ப ராசியில் இரவு 11:48 மணிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
இந்த சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
கடக ராசிக்கு இத்தனை காலம்.. கஷ்டமான காலம்தான். இது கடக ராசியா இல்லை கஷ்ட ராசியா என்று சொல்லும் அளவிற்கு மோசமாக இருந்தது உங்கள் காலம். பின்வரும் விஷயங்களில் உங்களுக்கு பிரச்சனைகள் நிலவின. அதன்படி கல்வி ரீதியாக கஷ்டப்பட்டீர்கள். அந்தரங்க விஷயங்களில் கஷ்டப்பட்டீர்கள். அதோடு இல்லாமல்.. பணம் இல்லாமல் பலர் கஷ்டப்பட்டார்கள்.
பலருக்கு வயிற்று பிரச்சனைகள் இருந்தன. சிலர் சர்க்கரை வியாதிகளால் அவதிப்பட்டு வந்தனர். அந்த பிரச்சனைகள் எல்லாம் இப்போது சரியாக தொடங்கி உள்ளது. ஆம் உங்கள் ராசிக்கு எதிர்பார்க்காத.. நீங்கள் இத்தனை காலம் எதிர்பார்த்த பல மாற்றங்கள் நடக்க போகின்றன.
1. முதலில் உங்கள் உடலில் நிலவிய பிரச்சனைகள் தீரும் 10- 15 ஆண்டுகளாக நிலவிய நீண்ட கால உடல் பிணிகள் உங்களுக்கு சரியாகும்.
2. மருத்துவத்தில் குரோனிக் நோய்கள் என்று கூறுவார்கள். அதாவது நீண்ட காலமாக இருக்கும் நோய்கள். இதை பொதுவாக சரி செய்ய முடியாது. ஆனால் அப்படிப்பட்ட நோய்கள் கூட உங்களுக்கு சரியாகிவிடும்.
3 . உங்களுக்கு அந்தரங்க பிரச்சனைகளும் இருந்து வந்தன. அவையும் இப்போது சரியாகிவிடும். கடந்த 1 வருடமாக குழந்தை இன்றி இருந்தீர்கள். சீக்கிரம் வீட்டில் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாட்டு பாட வேண்டிய நிலை வரும். அதாவது உங்களுக்கு சீக்கிரம் குழந்தை வரும்.
4. பொருளாதார ரீதியாக இத்தனை காலம் கடன் இருந்திருக்கும். வங்கியில் 5 லட்சம் .. கைமாற்றாக 2 லட்சம்.. குழு பணம் 5 லட்சம் என்று பல இடங்களில் லட்சக்கணக்கில் வாங்கி இருப்பீர்கள். அது எல்லாம் சரியாக போகிறது.
5. ஆனால் அதற்காக எல்லாம் நல்லதாக நடக்கும் என்று எண்ண வேண்டும். நல்லது இருந்தால் கெட்டதும் இருக்குமே. அப்படித்தான் இங்கும். உங்களுக்கு சொத்து ரீதியான பிரச்சனைகள் வரலாம்.
6. குடும்ப உறவில் பெரிய அளவில் பிரச்சனைகள் வரலாம்.
7. முக்கியமாக அப்பா - மகன் உறவு - மகள் - அம்மா உறவு ஆகிய உறவும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
8. சிலருக்கு வாகன விபத்துகள் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். வாகனங்களில் வேகமாக செல்ல வேண்டும்.
9. நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் பகிர வேண்டாம்.












Click it and Unblock the Notifications