பைன் மரங்களின் நிழலில் பளிச்சிடும் தெய்வீகம்.. மனதில் புது பலம் தரும் தாராதேவி அம்மன்!
சிம்லா: இமயமலையின் அழகான மலைநகரான சிம்லாவிற்கு அருகில், தாராதேவி மலை உச்சியில், நம்மைப் பார்த்து சிரித்தபடி எழுந்தருளியிருக்கிறாள் தாராதேவி அம்மன். சிம்லாவாசிகளின் குல தெய்வமாகவும், ஆற்றலின் அதிபதியாகவும் திகழும் இந்த அம்மனை தரிசித்தால் மனதில் புது உற்சாகம் பிறக்கும் என்பது நம்பிக்கை.
கனவில் உதித்த கோயில்: பதினெட்டாம் நூற்றாண்டில் வங்க மன்னரான பூபேந்திர சென், ஜாகர் காட்டில் வேட்டையாட வந்தபோது வழி தவறி இரவில் காட்டிலேயே தங்கினார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய தாராதேவி, தனக்கு கோயில் கட்ட வேண்டும் எனக் கேட்டாள். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, 1766-ஆம் ஆண்டு கோயில் கட்டப்பட்டு வழிபாடு தொடங்கியது. பின்னர் பல காலங்களில் புதுப்பிக்கப்பட்டு, இன்று நாம் காணும் அழகிய கோயிலாக மாறியது.

தெய்வீக அனுபவம்: கருவறை மரத்தாலான கண்ணாடி மாளிகையாக காட்சியளிக்கிறது. இமாச்சல பிரதேச பாணியில் கூம்பு வடிவ விமானம் கொண்ட இந்தக் கோயிலில், ஆபரணம் அணிந்து கம்பீரமாக எழுந்தருளியிருக்கும் தாராதேவி அம்மனை தரிசிக்கும் அனுபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோயிலின் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக வெளியே பார்த்தால், பனி படர்ந்த மலைகள், பசுமை நிறைந்த காடுகள் கண்களுக்கு விருந்து படைக்கும்.
தெய்வீக சக்தி: தாராதேவி அம்மன், காளி, சரஸ்வதி, பகவதி அம்மன் ஆகிய தெய்வங்களின் அம்சங்களையும் தன்னில் கொண்டுள்ளாள். அவர்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. பைரவருக்கும் தனிக் கோயில் உள்ளது. நவராத்திரி, துர்காஷ்டமி போன்ற விழாக்களில் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். குறிப்பாக, வியாழக்கிழமை தினங்களில் தாராதேவியை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் என்பது நம்பிக்கை. தீபாவளி அமாவாசை, செவ்வாய்க்கிழமைகளில் வரும் அமாவாசைகளும் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த நாட்கள். சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
எப்படி செல்வது: சிம்லாவிலிருந்து தாராதேவி கோயில் 11 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. டெல்லி மற்றும் சண்டிகரிலிருந்து சிம்லாவுக்கு பேருந்து அல்லது சொந்த வாகனத்தில் செல்லலாம். தாராதேவி அம்மனை தரிசித்து, மனதில் அமைதியையும் ஆற்றலையும் பெற சிம்லாவுக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுங்கள். அதுவும் தீபாவளி நேரத்தில் ரொம்பவே விஷேசம். காலை 7 மணி முதல் மாலை 6.30 மணிவரை கோவில் நடை திறந்திருக்கும்.
விசேஷ தகவல்: கோயிலுக்கு அருகில் உள்ள சன்கட்மோசன் அனுமன் கோயிலையும் தரிசிக்கலாம். அங்கு சென்று வழிபட்டால் மன தைரியம் பிறக்கும் என்பது நம்பிக்கை. தொடர்புக்கு: 94508 85611. Tara Devi Temple Shimla Phone Number: 0177 2002150
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications