தை அமாவாசை: சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள் - காய்ச்சல் உள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை
தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
விருதுநகர்: தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அதேபோல இரவு நேரத்தில் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர்.

கொரோனா பரவலை முன்னிட்டு அவ்வப்போது சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை முதல் நாளை 1ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று தை மாதம் அமாவாசை என்பதால் சுந்தரமகாலிங்கசுவாமிக்கு பால், பழம் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலில் குவிந்துள்ளனர்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிலுக்கு வர அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இரவு நேரத்தில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. நீர் ஓடையில் குளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பிரதோஷத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
சதுரகிரியில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் உள்ள நுழைவுவாயிலில் பக்தர்களுக்கு சேவை கட்டணமாக வனத்துறை சார்பில் ரூ. 5 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேவை கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications