For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழனியில் தைப்பூசம் கோலாகல கொடியேற்றம் - திருக்கல்யாணம், தேரோட்டம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை

தைப்பூசம் திருவிழா பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பங்கேற்கவில்லை.

Google Oneindia Tamil News

பழனி: தைப்பூசத் திருவிழா பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதன்முதலாக பழனி தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்,திருத்தேரோட்டம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. அதிலும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி, முருக பெருமானுக்குரிய வழிபாட்டில் முக்கிய நாளாக இருக்கிறது. தை மாதம் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.

இதே நாள்..21 வருடம்..3 வெற்றி..மறக்கமுடியாத நாள்...உருகிய சிம்ரன்..வாழ்த்தும் ரசிகர்கள்இதே நாள்..21 வருடம்..3 வெற்றி..மறக்கமுடியாத நாள்...உருகிய சிம்ரன்..வாழ்த்தும் ரசிகர்கள்

தைப்பூச திருநாள் கொண்டாடப்படுவதற்கு தமிழர்களின் வானியல் அறிவும் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. பூசம் என்பது வானில் இருக்கும் ஒரு நட்சத்திர கூட்டம்.

தமிழர்கள் திருநாள்

தமிழர்கள் திருநாள்

தைப்பூசத்தன்று சூரியன் மகர ராசியிலும் சந்திரன் பூச நட்சத்திரத்தில் கடக ராசியில் வடக்கும் சஞ்சரிக்கும். இந்த நாளை சிறப்பான நாளாக உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் இந்த தைப்பூச திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர் பலவிதமான நேர்த்திக்கடன்களை பய பக்தியுடன் செலுத்துவது வழக்கம். அழகு குத்தியும் காவடி சுமந்தும் முருகன் ஆலயங்களுக்கு வருவார்கள்.

தைப்பூசம் கொடியேற்றம்

தைப்பூசம் கொடியேற்றம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள். இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் இன்று காலை 6.30மணிக்குமேல் யாக வேள்வியுடன் வேதமந்திரங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

கொடிமரத்தின் அருகே எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி,தெய்வானைக்கு தீபாராதானை நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் அமலில் உள்ளதால் முதன்முதலாக பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்களின்றி வெறிச்சோடிய நிலையில், திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் தைப்பூசக் கொடியேற்றம் நடைபெற்றது.

தைப்பூச தேரோட்டம்

தைப்பூச தேரோட்டம்

தைப்பூச விழா இன்று முதல் 10நாட்களுக்கு நடைபெறும். நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளி ஆடு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், புதுச்சேரி சப்பரம், தங்கக் குதிரை, தங்க மயில் போன்ற வாகனங்களில் தைப்பூசத் திருவிழாவின் 6ம் நாள் திருவிழாவான 17ம்தேதி நடைபெறும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்,7ம்நாளான 18ஆம்தேதி நடைபெறும் திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
Thaipusam festival 2022: (தைப்பூசம் 2022) The Thaipusam festival started with the flag hoisting at Palani. The temple administration has announced that devotees will not be allowed to witness the main event, the Tirukkalyanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X