வெளிநாடு செல்லும் யோகம் தரும் பைரவர் - தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர், கால பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரும்.

பைரவர் சிவனது அம்சம் ஆவார். பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

07.02.2018 புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியாகும். இது கால பைரவரை வணங்குவதற்கு ஏற்ற தினமாகும். இந்த நாளில் கால பைரவ வழிபாடு செய்தால் கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்.

காவல் தெய்வம் பைரவர்

காவல் தெய்வம் பைரவர்

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் பைரவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

பைரவருக்கு பூஜை

பைரவருக்கு பூஜை

இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

பாதிப்புகள் நீங்கும்

பாதிப்புகள் நீங்கும்

அகந்தை பொய், அக்கிரம அநியாயக்காரர்களை அழித்து நீதியை நிலைநாட்டும் குறிக்கோளோடு வடிவம் எடுத்தவர் பைரவர். செய்வினை, சூனிய கோளாறுகள், பேய், பிசாசு, முனி, காட்டேரி போன்ற பாதிப்பிலிருந்து நீங்க இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும். ஆலயங்களில் முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது.

ஸ்ரீ சொர்ண ஆகார்ஷண பைரவர்

ஸ்ரீ சொர்ண ஆகார்ஷண பைரவர்

நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளை வேண்டி செல்வத்துக்கு அதிபதியான மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கொடுத்தவர் ஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். என்பது அறிந்ததே.

ஸ்ரீ பைரவருக்கு நிவேதனம்

ஸ்ரீ பைரவருக்கு நிவேதனம்

மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர். பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

சொர்ண ஆகார்ஷ்ண பைரவர்

சொர்ண ஆகார்ஷ்ண பைரவர்

பால்,இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் வழிபாடு செய்வது சிறப்பாகும்.சுண்டல், வடை,பாயசம், சர்க்கரைப்பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இத்தகைய சிறப்புடைய பைரவருக்கு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகில் எங்கும் இல்லாதவாறு அஷ்டபைரவருடன் மகா பைரவரையும் சொர்ண ஆகர்ஷ்ண பைரவரையும் டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாகம்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாகம்

07.02.2018 புதன் கிழமை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையும் 08.02.2018 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண கால பைரவர் யாகம் நடைபெறுகிறது.இந்த யாகத்தில் பக்தர்களின் பலவிதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடையவும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது.

சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்

சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்

தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர், வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரும். வீட்டில் செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும் மேலும் வழக்குகளில் வெற்றி பெறவும் தம்பதிகள் ஒற்றுமைக்கும் வெளிநாடு செல்வதற்கும் வியாபாரம் தொழில் உத்தியோகம் மேம்படவும், செய்வினை திருஷ்டி, மனதடைகள் நீங்கவும் ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bhairav ashtami is also known as Kalashtami and therefore, considered to be an auspicious day for occult activities.A special pooja for Bairavar with Ashtami yaagam conducted on January 9, 2018, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற