For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமலை பிரம்மோற்சவம் அக்டோபர் 4ல் கருடசேவை - ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம்

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்ற பின்னர் திருமலை திருப்பதியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சபம் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை ந

Google Oneindia Tamil News

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 4ஆம் தேதி கருடசேவை நடைபெறுகிறது. எட்டாம் தேதிவரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவில் தொடக்க நாளன்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி சுவாமிக்கான பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து சமர்ப்பிக்க உள்ளார்.

உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதிலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் 30ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் 24ம்தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். மாதிரி கருட சேவை செப்டம்பர் 14ம்தேதி நடைபெறும்

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - இன்று பட்டினத்தார் குருபூஜை காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - இன்று பட்டினத்தார் குருபூஜை

திருமலை பிரமோற்சவம்

திருமலை பிரமோற்சவம்

செப்டம்பர் 30 கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவத்தின் முதல்நாளில் பெத்தஷேச வாகனத்தில் மலையப்பசுவாமி உலா வருகிறார். சின்ன ஷேச வாகனம், ஹம்சவாகனம், சிம்மவாஹனம், முத்துப்பல்லாக்கு, கல்ப்ப விருஷம், சர்வபூபால வாகனம், மோகினி அலங்காரம் என மலையப்பசுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கருடவாகனத்தில் வீதி உலா

கருடவாகனத்தில் வீதி உலா

கருடசேவை நாளான அக்டோபர் 4ம் தேதி இரவு 7 மணிக்கு கருட வாகன சேவை புறப்படும். மற்ற நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 8 மணி முதல் 11 மணி வரை சுவாமி வீதி உலா நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். அக்டோபர் 5ஆம் தேதி ஹனுமந்த வாகனம் தங்க ரத உற்சவம், கஜவாகனம், சூர்ய பிரவை வாகனம், சந்திர பிரபை வாகனம், ரத உற்சவம் என அக்டோபர் 8ஆம் தேதி வரை பத்து நாட்களும் திருமலையில் உற்சவங்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

பக்தர்களுக்கு லட்டு

பக்தர்களுக்கு லட்டு

பிரம்மோற்சவத்தின்போது பக்தர்களுக்கு தரிசனம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். விழாவில் 3500 ஸ்ரீவாரி சேவகர்கள், 1000 சாரண சாரணியர் பக்தர்களுக்கு சேவை செய்வார்கள் எனவும் தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விஐபி தரிசனம் ரத்து

விஐபி தரிசனம் ரத்து

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதில் தொடங்கி விஐபி டிக்கெட் புக்கிங் வரை ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் பக்தர்கள் முழுமையாக தெரிந்துக் கொண்ட பின்பு திருப்பதி செல்ல திட்டமிடுவது மிகவும் அவசியம். ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இதுவரை தேவஸ்தானம் போர்ட் பின்பற்றி வந்த அனைத்து விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டன. விஜபி தரிசனமும் இதில் அடங்கும். பக்தர்களின் வருகையே முக்கியம் அனைத்து பக்தர்களுக்கு தரிசனம் கிட்ட வேண்டும் என்பதற்காக இந்த புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

 பக்தர்களுக்கு விரைவு தரிசனம்

பக்தர்களுக்கு விரைவு தரிசனம்

திருப்பதியில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் எல்1, எல்2, எல் 3 என்று மூன்று வகையான விஐபி தரிசன முறையை ரத்து செய்யப்பட்டது. மூலவர் சன்னதியின் அருகே வழங்கப்பட்டு வந்த தீர்த்தம், சடாரி ஆசீர்வாதம் ஆகியவை மூலவர் சந்நிதிக்கு வெளியே வழங்கப்படுவதால் தற்போழுது விஐபி தரிசனத்திற்கான நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்கின்றனர்.

English summary
Thirumalai Thirupathi Bramorchavam to begins on September 30, 2019 The famous garuda seva on October 4,2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X