திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி: திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் பங்குனிப் பெருவிழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான பங்குனிப் பெருவிழா பிப்ரவரி 22ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாகவும், சக்தி பீடங்களில் வராகி பீடமாகவும் திகழ்வது திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம். யானை பூஜித்ததால் யானைக்காவல், கஜாரண்யம், கரிவனம் ஆகிய பெயர்களாலும், அம்பாள், ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் "உபதேச ஸ்தலம்" என்றும், சம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் சம்பு வனம், ஜம்புகேஸ்வரம் என்றும் இந்தத் தலம் அழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் பங்குனிப் பெருவிழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான பங்குனிப் பெருவிழா பிப்ரவரி 22ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பங்குனி தேரோட்டத்துக்கான எட்டுத்திக்கும் கொடியேற்றம் மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் முதல் தினந்தோறும் சுவாமி, அம்பாள் காலையில் புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று (மார்ச் 15) இரவு தேரோட்டத்துக்கு முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் தெருவடைச்சானில் வீதியுலா வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 16ஆம்தேதி காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோருக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிகாலை 2.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

முன்னதாக, விநாயகர், சுப்பிரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 8.05 மணிக்குஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்துஇழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் காலை 9.20 மணிக்கு தெற்கு உள்வீதி சந்திக்கும் இடத்துக்கு வந்தது.
பின்னர் காலை 9.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் பிற்பகல் 2 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார்.

தேரோட்டத்தின் போது மேளதாளம், சங்கொலி முழங்க வானவேடிக்கைகள் நடைபெற்றன. ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சுவாமி தேர் மதியம் 2.15 மணிக்குவடம் பிடித்து இழுக்கப்பட்டு மதியம் 2.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் மதியம் 3.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications