திருவண்ணாமலை: மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை - புனித நீர் தெளிப்பு
கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை செய்யப்பட்டது. அண்ணாமலையார் பாதத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை: மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதம் பட்டதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படும். தீபத்திருவிழா முடிவடைந்த நிலையில் நேற்று புனித நீர் தெளிக்கப்பட்டு பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. மகாதீபம் ஏற்றப்பட்ட நாளில் பக்தர்கள் மலைமீது ஏற அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு 11 நாட்கள் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். பிரபல நடிகையும் கூட மலை மீது ஏறி தரிசனம் செய்தார்.

மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதம் பட்டதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடைபெற்றது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மலை உச்சியின் மீது சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து புனித நீரை தெளித்தனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications