திருச்சானூர் பிரம்மோற்சவம் 2018: கஜ வாகனத்தில் எழுந்தருளி பத்மாவதி தாயாரை தரிசித்த பக்தர்கள்
திருச்சானூர் கோயில் பிரமோற்வசத்தின் 5ம் நாளன்று கஜ வாகனத்தில் பவனி வந்த பத்மாவதி தாயாரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி: திருச்சானூர் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று தங்க கஜ வாகனத்தில் பவனி வந்த பத்மாவதி தாயாரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் திருச்சானூர் அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம் டிசம்பர் 4ம் தேதி செவ்வாய்க் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பக்தர்களுக்கு அருள்
தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 4வது நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பத்மாவதி தாயார் பவனி
5ம் நாளான நேற்று காலை பத்மாவதி தாயார் நாச்சியார் அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பண்டிதர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. பெண்கள், ஆண்கள் பங்கேற்ற நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

அம்மனுக்கு காசுமாலை
முக்கிய வாகன சேவையான கஜ வாகனத்தில் இரவு தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்தார். இதையொட்டி, ஏழுமலையான் கோயில் இருந்து மூலவருக்கு சமர்ப்பிக்கப்படும் லட்சுமி காசுமாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருச்சானூருக்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, காசுமாலை ஊர்வலமாக பத்மாவதி தாயார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று இரவு கஜ வாகன வீதி உலாவின் போது காசுமாலை தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

திருச்சானூர் பிரம்மோற்சவம்
இதை தொடர்ந்து 9ஆம் தேதி இன்று இரவு தங்கதேரோட்டமும், கருடவாகனத்தில் வீதி உலா உற்சவமும், 11ஆம் தேதி ரதஉற்சவமும் நடைபெற உள்ளது. தென் மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனை, தப்பாட்டம், கேரள சண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிககள் இதில் இடம்பெற்றன. டிசம்பர் 12ஆம் தேதி வரை பிரம்மோற்சவ உற்சவம் நிறைவடைகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications