For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையானை பாதையாத்திரையாக தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்

அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும்.

Google Oneindia Tamil News

திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரண்டு நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருப்பதியில் நேற்று 75,016 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,116 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.59 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

காக்கும் ”திராவிட மாடல்”..தோளோடு தோள் நிற்கும் திராவிட இயக்கம்! முதல்வர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து..!காக்கும் ”திராவிட மாடல்”..தோளோடு தோள் நிற்கும் திராவிட இயக்கம்! முதல்வர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து..!

ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறப்பு

ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறப்பு

திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர், "புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. வருகிற 5ஆம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.

தங்க சிம்மாசனம்

தங்க சிம்மாசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3.60 கோடி ரூபாயில் தங்க சிம்மாசனம் தயார் செய்யப்படும். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரண்டு நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும்" என்று கூறினார்.

மும்பையில் வெங்கடேஸ்வரா கோவில்

மும்பையில் வெங்கடேஸ்வரா கோவில்

மும்பையில் வெங்கடேஸ்வரா கோவில் கட்டுவதற்காக மகாராஷ்டிர அரசு 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கி உள்ளது. அரசு வழங்கிய நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.அங்கு ரேமண்ட்ஸ் நிறுவனத் தலைவர் கவுதம் சிங்கானியா கோவில் கட்ட முன்வந்துள்ளார்.

திருப்பதியில் ரூ.20 கோடியில் பத்மாவதி மருத்துவக் கல்லூரி கட்டப்படும்.

மின்சார பஸ் நிலையம்

மின்சார பஸ் நிலையம்

சீனிவாச சேது பாலத்தின் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ளது. அந்த பாலத்தை 5ந் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார். இதையடுத்து 2வது கட்டமாக பாலம் கட்டும் பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணி வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். நிபுணர்களின் பரிந்துரைப்படி திருப்பதி மலைப்பாதையை பலப்படுத்த 2வது கட்டமாக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதிகளை சீரமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்படும். திருமலை பாலாஜி நகரில் 2.86 ஏக்கரில் மின்சார பஸ் நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Thirumalai Tirupati Devasthanam has announced that time slot booking tokens will be issued soon to devotees of Divya Darshan who are walking along the two sidewalks of Alibri and Srivarimettu to see the Seven Hills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X