திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவில் மாசித்திருவிழா - சங்கிலி நாச்சியார் சுந்தரர் திருக்கல்யாணம்
பூலோகம் கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் மாசி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் மாசி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 13ஆம் தேதி தேரோட்டமும், 15ம் தேதி ஒன்பதாம் நாள் செவ்வாய்கிழமை கல்யாண சுந்தரர் சங்கிலி நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

உலக பிரசித்தி பெற்ற 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி , வடிவுடையம்மன் கோவிலில் மாசி திருவிழா பத்து நாள் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு 108 சங்க நாதங்கள் முழங்க பரிவர்த்தனைகளுடன் கலச பூஜைகளுடன் வாத்தியங்கள் ஒலிக்க வெகு விமரிசையாக கொடியேற்றப்பட்டது.
மாசி உற்சவம் 17 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் உற்சவர் தியாகராஜர் , சூரிய பிரபை, சந்திர பிரபை, நாகவாகனம், அதிகாரநந்தி யானை வாகனம் என தினதோரும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து 15ம் தேதி ஒன்பதாம் நாள் செவ்வாய்கிழமை கல்யாண சுந்தரர் சங்கிலி நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளனர்
சங்கிலி நாச்சியாருக்கு தாலி சாத்தப்பட்ட உடன் ஆயிரக்கணக்கான பெண்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த புது தாலியை கழுத்தில் கட்டிக்கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இதையடுத்து மாலையில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் குழந்தை ஈஸ்வரர் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், இரவில் தியாகராஜசுவாமி மாடவீதி உற்சவமும் நடைபெறும்.
முன்ஜென்மத்தில், சுந்தரர் ஈசனுக்கு அருகில் இருந்து தொண்டு செய்து வந்தார்.அவர் தேவலோகத்தில் இருந்த காலத்தில்,அங்கிருந்த இரண்டு பெண்கள்மீது காதல் கொண்டார்.அந்த இரண்டு பெண்களும் அம்பாளின் பணிப் பெண்கள்.அவர்களும் அவரை விரும்பினர்.
இதன் காரணமாக,அவர்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டியதாயிற்று. ஒரு பெண், பரவை என்ற பெயரில் திருவாரூரிலும், மற்றொருவர் சங்கிலி என்ற பெயரில் சென்னை திருவொற்றியூர் அருகிலுள்ள ஞாயிறு என்ற கிராமத்திலும் அவதரித்தனர்.ஒரு சமயம், திருவாரூர் சென்ற சுந்தரர், அங்குள்ள கோவிலுக்கு வந்த பரவையைப் பார்த்தார் காதல் கொண்டார்.
சிவன் அருளால் அவர்களுக்கு திருமணமும் நடந்தது. சில காலம்,அங்கு தங்கியிருந்த அவர், சிவத்தலங்களைத் தரிசிப்பதற்காக மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கிளம்பினார்.திருவொற்றியூர் வந்த போது, அங்கே கன்னிமாடம் அமைத்து தங்கியிருந்த சங்கிலியை கண்டார்.சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் அவர் மீது காதல் கொண்டார்.சங்கிலியாரும் சுந்தரர் மேல் காதல் கொண்டார்.ஆனால் அவரால் வெளிப்படுத்த முடியவில்லை.
சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர்,தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார்.அதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் ஈசன் தோன்றி சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார். சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.ஆகையால் என்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார். ஈசன் இதை சுந்தரரிடம் கூறினார்.
அதற்கு சுந்தரர் ஈசனிடம், ஊர் ஊராகச் சென்று ஈசனைப் பாடும் நான்,ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம். அந்தப் பெண்ணைப் பிரியாமல் என்னால் இருக்கமுடியாது.அதே சமயம் அவளை நான் மணக்கவும் வேண்டும்.
ஈசன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது.ஆகவே சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நதியில் நீங்கள் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்து கொள்ளும் என்றார் ஈசனிடம் சுந்தரர்.
இதனை ஈசன் சங்கிலி நாச்சியாரிடம் தெரிவித்தார். எனவே திருமணம் நடக்கும் சமயம் சங்கிலி நாச்சியார் சுந்தரரிடம் மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த ஈசனை மூன்று முறை வலம் வந்து,என்றும் உன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். அந்த திருக்கல்யாண உற்சவம் மாசி மகம் நாளில் நடந்தேறியது. இந்த ஆண்டு வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications