For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று உலக ஹலோ தினம்- நட்பு வளர்க்கும் பாண்டவ தூதர் பெருமாள்

இன்று உலக ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் நட்பை வளர்க்கும் பாண்டவ தூதர் பெருமாளைப் பற்றிப் பார்ப்போம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இன்று நாடு முழுவதும் உலக ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு 180க்கும் மேற்பட்டநாடுகளில் இத்தினம் கோலாலகமாககொண்டாடப்பட்டு வருகிறது.

எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு 180க்கும் மேற்பட்டநாடுகளில் இத்தினம் கோலாலகமாககொண்டாடப்பட்டு வருகிறது.

பத்துபேர்களுக்கு ஹலோ சொல்வது மூலம் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டேஇந்த தின கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ முடியும். இத்தினம் தகவல் பரிமாற்றத்தின் சக்தியாகவும், அமைதியின் மறுவடிவமாகவும் இருக்கிறது. பலர் இத்தினத்தில் உலக தலைவர்களுக்குவாழ்த்து அனுப்பி அவர்களை தொடர்ந்து உலக அமைதிக்கு போராடும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.

Today World Hello Day - Pandava thoothar perumal

இந்த ஹலோ என்ற சொல் நட்புறவை அதிகரிக்கும் சொல். ஜோதிட ரீதியாக ஒருவருக்கு நட்பு எப்படி அமையும், நல்ல நட்பு கிடைக்கவும், அனைவரும் நட்பு பாரட்டுவதற்கு செல்ல வேண்டிய திருத்தலம் பற்றி விளக்கியுள்ளார் ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன்.

நீங்கள் நட்பானவரா?

ஜோதிடத்தில் நட்புறவுக்கும் தகவல் தொடர்புக்கும் காரக கிரகம் புதன் தான். ஒருவருக்கு ஜாதகத்தில் புதன், மூன்றாமிடம், ஏழாமிடம் மற்றும் பதினோறாமிடம் இம்மூன்றும் நல்ல நிலையில் தொடர்பு பெற்று அதன் அதிபதிகள் நட்பாகவும் அமைந்துவிட்டால் அவர்கள் அனைவரிடமும் சிறந்த நட்புடன் விளங்குவர். அதிலும் லக்னம் ஜன வசிய ராசியான துலாம் மற்றும் ரிஷபமாக இருந்துவிட்டால் அனைவரும் தானாக வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

புதன் கிரகம்

கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத் துறை, தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை, வ்சீகரத்தன்மை, அறிவாற்றல், தந்திரம், கலகலப்பானவர், கோழைத்தனம் ஆகியவற்றின் காரகனான புதன்தான் நட்பை வளர்க்கவும் காரக கிரகம் ஆகிறது.

Today World Hello Day - Pandava thoothar perumal

மிதுன ராசி

அதேப்போல் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமான மிதுனம் புதனுக்குறிய வீடாகி அதுவே தகவல் தொடர்பை குறிக்கும் பாவமாகிறது. எனவே ஒருவரின் தகவல் தொடர்பை குறிக்கும் மூன்றாம் வீடு, கன்னி, மிதுனம், புதனிருக்கும் வீடு ஆகியவற்றை கொண்டு ஒருவரின் நட்பையும் தகவல் தொடர்பையும் தீர்மானிக்க முடியும். மேலும் காமம், புத்திசாலித்தனம், கல்வி, கவர்ச்சி, ரகசியத் தொடர்பு, போட்டி, இணக்கமாக இருத்தல் ஆகியவற்றை குறிக்குமிடமாகவும் அமைகிறது.

மூன்றாம் பாவகம்

இந்த மூன்றாம் பாவகத்தை ஜெயஸ்தானம், வீரியஸ்தானம், சகோதிர ஸ்தானம், என்று வேறு பெயர்களால் அழைக்கப்படும். இந்த மூன்றாம் பாவம் அமைந்துள்ள ராசியின் அதிபதியை சகோதிர ஸ்தானாதிபதி, ஜெயாதிபதி, (அ) மூன்றாமதிபதி என்று அழைக்கப்படுவார்.

மூன்றாம் பாவம் எழுத்தினைக் குறிக்கும். எனவே எல்லா வித தகவல் தொடர்புகளையும், தகவல் பரிமாற்றங்களையும், ஒப்பந்தங்களையும் மூன்றாம் பாவமே குறிக்கும்.
மூன்றாம் பாவம் இடமாற்றங்களையும், சிறு பயணங்களையும், பக்கத்து வீடு, பக்கத்து ஊர், அண்டை மாநிலம், அண்டை நாடுகள் போன்றவற்றைகளையும், சொத்துக்களை இழத்தல், விற்பனை செய்தல், பண்டமாற்று போன்றவற்றையும் குறிக்கும்.

ஆரம்ப கல்வி கற்பதற்கேற்ற மனச்சார்பு, அறிவு, குறுகிய பயணம், சாலை, சைக்கிள், பஸ், கடிதம், கணிதம், தபால் நிலையம், தொலைபேசி, கைபேசி, தொலைக்காட்சி, ரேடியோ செய்திகள், எதையும் சுருக்குதல், அடையாள சின்னங்கள், சான்றிதழ்கள், காசோலைகள், உலகில் உள்ள அனைத்து பதிவுகள், மத்தியஸ்தம், தூது செல்லுதல், பத்திரிகைகள் ஆகியவையும் மூன்றாம் பாவத்தின் காரகங்களாகும்.

எழாம் பாவம்

ஏழாம் பாவத்தை ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு உரிய பாவமாக நம் முன்னோர்கள் கூறினார்கள். கணவன், மனைவி உறவினை தவிர்த்து மற்ற உறவு முறைகளான அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமா, மாமி, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, குழந்தை போன்ற உறவுகள்.

Today World Hello Day - Pandava thoothar perumal

ஏழாம் பாவம் என்பது ஜாதகருக்கு சமமான நபர்களை குறிப்பதால் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதல், வாடிக்கையாளரையும், ஜாதகருக்கு உள்ள பொதுஜன தொடர்பினையும், ஜாதகருக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தையும், ஜாதகர் மற்றவரிடம் சகஜமாக பழகுபவரா அல்லது பொருளாதார ரீதியில் பழகுபவரா என்பதையும், மற்றவர்களால் ஜாதகர் ஏமாற்றப்படுவாரா என்பதையும் 7 ம் பாவம் மூலம் ஒருவரின் ஜாதகத்தில் அறியலாம்.

ஏழாம் பாவத்தின் காரகம்

ஜாதகரின் திருமண வாழ்க்கை, வாழ்க்கை துணை பற்றின விபரங்கள், பொதுமக்களின் ஆதரவு, பொதுக்கூட்டங்கள், திருடனை பற்றின விபரங்கள், எதிர்பாலின ஸ்பரிச சுக பரிமாற்றங்கள், மற்றவருடனான நீண்ட நாள் பழக்க வழக்கங்கள், வியாபாரத்தில் பங்குதாரர்கள், ஜாதகரின் வெளிப்படையான குணம், எதிலும் மற்றவரை இணைத்து கொள்ளுதல், இரண்டாவது குழந்தை, மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், பிறரைச் சார்ந்திருத்தல், போன்றவை ஏழாம் பாவத்தின் காரகங்களாகும்.

11ம் பாவம்

ஒருவருடைய விருப்பம், ஜாதகரின் நெருங்கிய நண்பர்கள், ஜாதகரின் நலம் விரும்பிகள், ஜாதகரை முகஸ்துதி செய்பவர்கள், சேமிக்கும் பழக்க வழக்கங்கள், முயற்சிகள் சித்தியாதல், ஆசைகள் நிறைவேறிய பின் கிடைக்கும் திருப்தி, நீடித்த நட்பு, போன்றவைகள் 11ம் பாவத்தின் காரகங்களாகும்.

நட்பு வளர்க்கும் பாண்டவ தூதர் பெருமாள்:

உங்களுக்கு அக்கம் பக்கத்தார், உடன் பணிபுரிபவர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் பகைமை ஏற்பட்டு பிரச்சனை ஏற்படுகிறதா? நீங்கள் செல்ல வேண்டிய திருக்கோயில் பாண்டவ தூதர் பெருமாள். இந்த கோவில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது.

புதனின் அதிதேவதையான விஷ்ணு ஸ்வருபமான கிருஷ்ணரே பாண்டவ தூத பெருமாளாக கோயில் கொண்டுள்ளார். இந்த கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணர் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் புன்னகையோடு காட்சி யளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார். இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த இடம் முன்பு திருப்பாடகம் என்று அழைக்கப் பட்டது. இங்குள்ள கல்வெட்டுக் களில் இப்பெருமானை தூத ஹரி என்று குறிக்கப்பட்டுள்ளது.

தூது சென்ற கிருஷ்ணர்

மஹாபாரதத்தில் , பாண்டவர்களில் மூத்தவரான தருமர் சூதாட் டத்தில் கௌரவர்கள் சூழ்ச்சியால் தன் செல்வங்களையும் நாட்டையும் இழந்தார். அவர்களுக்கு ஒரு வீடாவது தர வேண்டுமென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துரியோதனனிடம் கேட்டு வாங்க தூது சென்றார். எனவே தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு மத்யஸ்தம், முகவான்மை ஆகிய பணிகளை மேற்கொள்பவர்கள் காஞ்சி பாண்டவ தூத பெருமாளை வணங்கிவருவது சிறப்பாகும். காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் கோவில், - காஞ்சிபுரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் ஹலோ தினத்தின் வயது 43. நிற்க நடக்க ஓட என மலிந்து போய் இருக்கும் தினக் கொண்டாட்டங்களுக்கு நடுவில் ஹலோ தினத்தின் சாரம் பாராட்டப்படக்கூடியதே. உலகமெங்கும் அமைதி நிலவ பாடுபடுவோம் என்னும் கருப்பொருளுக்கே வைக்கலாம் ஒரு சல்யூட்.

English summary
A simple 'HELLO' can make a big difference to someone's day! November 21, 2015 is the 43rd annual World Hello Day. World Hello Day was begun in response to the conflict between Egypt and Israel in the Fall of 1973. Since then, World Hello Day has been observed by people in 180 countries. People around the world use the occasion of World Hello Day as an opportunity to express their concern for world peace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X