விளம்பி தமிழ் புத்தாண்டு: தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகங்கள்- கனிகளால் அலங்காரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி இன்று 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மகா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ மகா லஷ்மி யாகமும் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

Vilambi Tamil New year special homam in Danvantri bhagavan

தமிழ் புத்தாண்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் காலை முதலே பக்தர்கள் சென்று வழிபட்டு இறைவனை வேண்டினர். அனைத்து மக்களும் நோய் நொடிகளின்றி ஆரோக்யமாக வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், உத்தியோகம், சிறக்கவும், குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படவும் வழிபாடு நடைபெற்றது.

Vilambi Tamil New year special homam in Danvantri bhagavan

நாட்டில் நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும், இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும், மேலும் மழை வேண்டியும் மதநல்லிணக்கம், மனித நேயம், மனித தர்மம் வளரவும் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் ஸ்ரீ மகாலஷ்மி யாகமும் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இந்த யாகத்தில் பலவகையான மலர்கள், பட்டு வஸ்திரம், நெய், தேன், வெண்கடுகு, வால்மிளகு, சீந்தல்கொடி போன்ற 108 விதமான மூலிகைகளும் சேர்க்கப்பட்டது. பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள் பிரசாதம் வழங்கினார்.

Vilambi Tamil New year special homam in Danvantri bhagavan

மேலும் நாளை 15.04.2018 ஞாயிற்று கிழமை அமாவசையை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சரப சூலினி பிரத்யங்கிரா யாகம், திருஷ்டி தோஷம், செய்வினை அகலவும் ஆரோக்யம் ஐஸ்வர்யம் பெறவும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கனிகளால் அலங்காரம்

அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் கதிா்வேல்முருகன் திருக்கோவிலில் சித்திரை விசு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு '''கனி அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்தனர்.

Vilambi Tamil New year special homam in Danvantri bhagavan

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vilambi Tamil New year celebration in Danvantri arokya peedam walajapet, special homam and Amavasai Prathiyangira devi Soolini durga homam.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற