உலக நீரிழிவு தினம்.. ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லாட்டி சுகர் வருமாம்.. குரு பகவான் கை கொடுப்பாரா?
சென்னை: வயசுல பிகர் வர்றதும்.. வயசானா சுகர் வர்றதும் வாழ்க்கையில் சகஜம் என்று சிங்கம் பட சினிமா டயலாக் சொன்னாலும் எல்லோருக்கும் அது பொருத்தமாக இருக்காது. 100 வயது வரைக்கும் நீரிழிவு பாதிப்பு இன்றி ஆரோக்கியமாக இருப்பவர்களும் உள்ளனர். சர்க்கரை நோய் பரம்பரையால் ஏற்படுகிறது என்றாலும் அதற்கு ஜாதக ரீதியான காரணங்களும் இருப்பதாக சொல்கிறது மருத்துவ ஜோதிடம்.
சர்க்கரை வியாதி: உலகில் ஏறத்தாழ 40 கோடி மக்களுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகளை கண்ணில் பார்ப்பதோடு சரி அச்சப்பட்டு பலரும் இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விட்டனர். நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

சர்வதேச நீரிழிவு தினம்: கண் பார்வை தெரியாமல் போவதற்கு, கை கால்களை அகற்றுவதற்கு மற்றும் சிறுநீரகப் பிரச்சினைக்கு நீரிழிவு நோயே முக்கியமான காரணமாக இருக்கிறது. 2030ஆம் ஆண்டில் நிகழும் மரணங்களுக்கு ஏழாவது முக்கியமான காரணமாக நீரிழிவு நோய் இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
குரு சுக்கிரன் கூட்டணி: ஒருவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்து விட்டால் நல்லதே நடக்கும். அதே நேரத்தில் குரு, சுக்கிரன் மறைந்திருந்தாலோ நீசமடைந்திருந்தாலோ நோய் பாதிப்புகள் ஏற்படும் என்பது ஜோதிட விதியாக உள்ளது. சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் ஆசிய இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். உலக சர்க்கரை நோய் தினமான இன்று சர்க்கரை நோய் பாதிப்புக்கான காரணங்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.
ஜோதிட ரீதியான காரணங்கள்: சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். குருவும் சுக்கிரனும் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்து விட்டால் நல்லதே நடக்கும். அதே நேரத்தில் குரு, சுக்கிரன் மறைந்திருந்தாலோ மகரத்தில் குரு நீசமடைந்திருந்தாலோ கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைந்திருந்தாலோ ஜாதகருக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஜாதகத்தில் கிரகங்கள்: பிறந்த ஜாதக கட்டத்தில் சுக்கிரன் லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசாபுத்தி காலமான 20 ஆண்டு காலத்தில் ராஜயோக பலன்களை கொடுப்பார். அதே நேரத்தில் நீச்சம் பெற்றிருந்தாலோ, 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம்.
குருபகவான் அருள்: பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுகவாழ்க்கை கிடைக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி, உச்சம் பெற்றவர்களுக்கும் நீசமடைந்தவர்களுக்கும் வக்ரம் பெற்றவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குருஆட்சி உச்சம் பெற்றவர்கள் சர்க்கரை நோய் வந்தாலும் எதிர்ப்பு சக்தி பெற்று மருந்து மாத்திரைகளுடன் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் குரு நீச்சம் வக்ரமடைந்தவர்களுக்கு எந்த மருந்துகள் சாப்பிட்டாலும் நோய்கள் கட்டுப்படுவதில்லை.
சூரிய நமஸ்காரம்: தினசரி அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்யலாம். இது சிறந்த பரிகாரம். ஆதித்ய ஹிருதயம் சொல்லலாம். யோகா, தியானம் செய்வதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். மகாலட்சுமி ஆலயத்தில் 9 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு வெள்ளை நிற ஆடை தானமாக அளிக்கலாம். நெய், சர்க்கரை ஆகியவைகளை கோவிலுக்கு தானமாக அளிக்கலாம்.
சர்க்கரை நோய் பரிகாரம்: பிறந்த ஜாதகத்தில் குரு கிரகம் திக்கப்பட்டவர்கள் கோவிலில் சர்க்கரை பொங்கல் படைத்து பிரசாதமாக கொடுக்கலாம். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சர்க்கரை, பாசிப்பருப்பு, வாழைப்பழம் சேர்த்த இனிப்பு செய்து கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். வெள்ளை நிற பசுவிற்கு வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு சப்பாத்தி செய்து கொடுக்கலாம். இதன் மூலம் மரபு ரீதியாக ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். வியாழக்கிழமை ஜீவ சமாதிகளில் மஞ்சள் நிற லட்டு நைவேத்தியம் செய்து அதை பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கலாம்.
நோய் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி: செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய் கிழமையில் சென்று தரிசனம் செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும். இத்துடன் திருவாரூர் மாவட்டம் கோயில் வெண்ணியில் உள்ள அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
உணவு கட்டுப்பாடு: ஜாதக ரீதியான பரிகாரங்களை செய்யும் நேரத்தில் சரியான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, எதற்கும் கலங்காத மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும் எந்த நோயையும் எதிர்கொள்ளலாம். வாய் கட்டுப்பாடு அவசியம். கண்டதை சாப்பிடாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications