Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2023 இயர் எண்டர் ஜோதிடம்: 2024ல் இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. குரு பகவான் 12 ராசிகளில் பயணம் செய்து விட்டு மீண்டும் மேஷ ராசியில் இருந்து பயணத்தை தொடங்கினார். குரு வளையம் எனப்படும் ரிஷப ராசியில் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் பயணம் செய்யப்போகிறார். சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழப்போகிறது.

துலாம்: குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வையால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 2024ஆம் ஆண்டில் குரு 8ஆம் வீட்டிற்கு சென்றாலும் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும், வேலையில் புரமோசனும் கிடைக்கும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டிற்கு கிடைப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரப்போகிறது.

Year ender 2023 astrology news: Guru peyarchi palan prediction for Thulam to Meenam

விருச்சிகம்: குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் ருண ரோக சத்ரு ஸ்தான குருவாக பயணம் செய்கிறார். கடன் நோய் எதிரி தொந்தரவுகள் நீங்கும். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்பட்டு சிகிச்சை மூலம் எளிதில் குணமடையும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். எனவே யாருக்கும் இந்த கால கட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் நேரடி பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு: உங்கள் ராசிநாதன் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டில் குரு பயணம் செய்வதால் ஏப்ரல் மாதம் வரைக்கும் புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. மே மாதத்திற்குப் பிறகு தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும் தேடி வரும் அதிர்ஷ்ட தேவதையை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்.

மகரம்: 2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே குருபகவான் உங்களுக்கு அற்புதமான யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறார்.
குரு பகவான் சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் பயணம் செய்வதால் வீடு வாங்கலாம். புது வீடு கட்டி குடியேறலாம். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மே மாதத்திற்குப் பிறகு குரு பெயர்ச்சியால் குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அதிகாரப்பதவி தேடி வரும். புரமோசனும், சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்: உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீடான தைரியம், முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவினால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுடைய கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பலன் வந்து விட்டது. திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலை தொழிலில் லாபம் கிடைக்கும். 2024ஆம் ஆண்டில் கவனத்தோடு இருக்க வேண்டிய கால கட்டம். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம் அகலக்கால் வைப்பது ஆபத்தாகி விடும். சிறிய அளவில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.

மீனம்: குடும்ப ஸ்தானமான இரண்டாவது வீட்டில் பயணம் செய்யும் குருபகவானால் நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றியடையும். நல்ல தன வரவு வரும். சேமிப்பும் உயரும். கடன் பிரச்சினைகள் நீங்கும் காலம் வந்து விட்டது. திருமண சுபகாரிய முயற்சிகள் கை கூடி வரும். 2024ஆம் ஆண்டில் நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+