சனி பெயர்ச்சி பலன் 2023: அஷ்டம சனியால் கஷ்டமில்லை.. விபரீத ராஜயோகம் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். சனி பகவானின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார்.
கும்ப ராசியில் சனி: நவகிரகங்களில் சனியைப் பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சனி சஞ்சரிக்கும் இடத்தைப் பொருத்து பலன்களும் பாதிப்பும் ஏற்படும் என்றுதான் சனிபகவான் கும்பம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து பயணம் செய்வதால் கடக ராசியில் உள்ள பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனி நடைபெறுகிறது. இந்த சனி பெயர்ச்சி காலத்தில் அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் சனிபகவான் பயணம் செய்வார்.

ராஜயோகம் தரும் சனி: கடக ராசிக்கு சனி பகவான் 7 மற்றும் 8ஆம் வீட்டிற்கு உடையவர். அஷ்டம சனி காலத்தில் உடல் ரீதியாக பாதிப்பு வரலாம் எச்சரிக்கை தேவை. எட்டுக்கு உடையவர் எட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவீர்கள்.
அதீத கவனம்: சனி பகவானின் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுகிறது. இரண்டாம் வீடு, மற்றும் ஐந்தாம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுகிறது. இந்த கால கட்டத்தில் பிசினஸ் செய்பவர்கள் பண முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். பணத்தை பத்திரமாக பாதுகாப்பது அவசியம். பேசும் வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள் இல்லாவிட்டால் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கூட சண்டைகள் வரலாம் கவனமாக பேச வேண்டும்.
முதலீகளை தவிர்க்கவும்: வேலை செய்யும் இடத்தில உங்க திறமைகள், புகழ், பெருமைகளை மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படையாக முடிவுக்கு வரும். பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழுங்கள்.
கடன் கொடுக்காதீர்கள்: விபரீத ராஜயோகத்தால் எதிர்பாராத பண வருமானம் வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலைகளை விடும் முன்பு ஒருமுறை இருமுறை யோசிக்கவும். யாராவது பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். பேச்சினால் பிரச்சினை வரலாம் ஜாக்கிரதை.
வெற்றிகள் தேடி வரும்: அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். முயற்சி திருவினையாக்கும். சதயம் சனி சஞ்சரிக்கும் காலத்தில் மனதில் எண்ணங்கள் அலைபாயும். சொல்லிலும் செயலிலும் கவனம் தேவைப்படும். சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வெளிநாடு வேலை வாய்ப்புக்கு முயற்சி பண்ணலாம். உங்களுடைய தசாபுத்தி சரியாக இருந்தால் வெற்றிகள் தேடி வரும்.












Click it and Unblock the Notifications