• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று உலக அன்னையர் தினம் - உங்க ஜாதகத்தில் சந்திரன் பலமா இருக்கா?

|

சென்னை: நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைவரும் வாழ்த்து செய்திகள் பரிமாரிக்கொண்டனர். அன்னையர் தினம் என்பது வருடத்தில் ஒருநாள் (மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) இவ்வருஷம் 13.05.2018 அன்று அன்னையை சந்தித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும் நாளாக மேல்நாட்டவர்கள் கொண்டாடும் இக்கால கட்டத்திலும் பல இந்தியர்கள் தம் வாழ்வில் எல்லா நாளையும் அன்னையர் தினமாகவே மதித்து அன்னையை மகிழ்விக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொத்திப்பொத்தி வளர்த்த தாய்க்கு ஒரு நாளை மட்டும் ஒதுக்கி மீதி நாளெல்லாம் சுயநலத்தோடு சுற்றித்திரியும் மேலைநாட்டு கலாச்சாரபடி நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்படட்டது

தாயார் என்பவள் நமக்கு ஜீவனை கொடுத்தவள். அவளது அபிலாஷைகளைப் பூர்த்தி பண்ண வேண்டியது ஒவ்வொரு புத்திரனின் கடமையாகும். பொதுவாக இறந்த பிறகுதான் ஒவ்வொருவரின் அருமையும் நமக்கு புரிகின்றது. பெத்த தாயைக் காப்பாற்றாமல் ஆசிரமங்களில் எத்தனையோ பேர் சேர்த்துள்ளார்கள்.

அனாதை ஆசிரமங்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமா இருக்கிறது. தாயாரை ரக்ஷிக்காதவர்களின் குடும்பங்கள் நன்றாக இருப்பதில்லை. மாத்ரு சாபம் பித்ரு சாபத்தைவிட மேலானது (அதிகமானது) என்கிறது தர்ம சாஸ்திரம். தாயாரின் பெருமை, கயா சென்று ஸ்ரார்த்தம் பண்ணும்போது நமக்குத் தெரியும். பல்குனி நதிக்கரையில் 64 பிண்டங்கள் வைக்கும் போது 16 பிண்டங்கள் தாயாருக்காக மட்டும் வைக்கப்படுகின்றன. நம்மை கர்ப்பத்தில் சுமந்தபோது, பின்னர் ஒருவரை ஆளாக்க, தாயார் பட்ட கஷ்டங்களை இந்த ஷோடஸி மந்திரங்கள் மூலம் கேட்கும்போது கண்ணில் நீர் வராதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.

ஐயிரண்டு திங்கள் வயிற்றில் சுமந்து இரவுபகலாய் கண்விழித்து நாளெல்லாம் பட்டினியாய் தான் இருந்தாலும், ஒரு கணமேனும் நம் பசி பொறுக்காது உணவூட்டி மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே எம்மை வித்தகனாய் கல்வி பெற வைத்து, மேதினியில் மேன்மையாய் நாம் வாழச் செய்த அந்த கண்கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, பணிவிடைகள் செய்து மகிழ்விக்க ஒருநாள் போதுமா? மாத்ரு தேவோ பவ: என்றும் மாதா,பிதா,குரு, தெய்வம் என்றும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் போற்றும் நமது மரபில் தாய்க்கு எப்போதுமே முதலிடம்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

ஜோதிடத்தில் தாய்:

ஜோதிடத்தில் தாய்:

அன்னையர் தினம் நமக்கு வசதியான ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடி மகிழ்ந்தாலும் ஜோதிடத்தில் தாயை குறிக்கும் கிரகம் இன்றைய நாயகர் சந்திர பகவானே ஆகும். நாலாம் வீடு தாய்ஸ்தானம் என போற்றப்படுகிறது. காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகமும் அதன் அதிபதியான சந்திரனும் தாயைபற்றி கூறும் கிரக அமைப்பாகும்.

ஜோதிடத்தில் கால புருஷ நான்காம் பாவமான கடகமும், ஜென்ன ஜாதக நான்காம் பாவமும் தாயை மற்றும் மட்டுமல்லாமல் வீடு வாகன யோகத்தினையும் தெரிவிக்கிறது, இதனை சிறிது சிந்தித்து பார்த்தால் தாயின் கருவறையே நமக்கு முதல் வீடாக அமைந்ததை குறிப்பிடுவதை உணரலாம். மேலும் கருவில் இருக்கும்போதும் குழந்தையாய் பிறந்த பிறகும் நம்மை பெற்ற தாயே நம்மை பல இடங்களுக்கும் சுமந்து சென்றிருப்பார், அதாவது நமக்கு முதல் வாகனமாகவும் இருந்திருப்பார், இதிலிருந்து நான்காம் பாவத்தினை தாய், வீடு மற்றும் வாகனத்திற்கான பாவமாக ஒதுக்கியதின் சிறப்பை உணரமுடியும்.

ஓருவரது தாயாரின் உறவு மற்றும் நிலை நன்றாக அமைய வேண்டுமானால் அவர் ஜாதகத்தில்:

ஓருவரது தாயாரின் உறவு மற்றும் நிலை நன்றாக அமைய வேண்டுமானால் அவர் ஜாதகத்தில்:

1.தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன் ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும்.

2.சந்திரன் பகை வீட்டிலோ அல்லது பாவிகளுடனோ 6,8,12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்கக்கூடாது.

3.நீசமடைந்திருக்கக்கூடாது. அப்படி நீசமடைந்தாலும் நீசம் பங்கமடைந்திருக்க வேண்டியது அவசியம்.

மேற்சொன்னபடியே நான்காம் பாவம் கீழ்குறிப்பிட்டபடி அமைவது நலம்.

மேற்சொன்னபடியே நான்காம் பாவம் கீழ்குறிப்பிட்டபடி அமைவது நலம்.

1.லக்னத்திற்கு நான்காம் பாவதிபதி கிரகங்கள், பாவிகள் மற்றும் 6,8,12 அதிபதிகள் பார்வை சேர்க்கை இல்லாமல் அமைந்திருக்க வேண்டும். ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும்.

2. நான்காம் பாவாதிபதி நீசமடைந்திருக்கக்கூடாது.

3. தனது பாவத்திற்க்கு மறைவில் அமரக்கூடாது.

4. இவை தவிர கிரகண தோஷம், பாவகர்தாரி தோஷம் போன்றவற்றிற்கு ஆட்படாமல் இருப்பது அவசியமாகும்.

5. முக்கியமாக பெண்கள் ஜாதகத்தில் சந்திரனும் ஜெனன ஜாதக நான்காம் அதிபதியும் கேதுவோடு எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். கேதுவோடு சேர்க்கை பெற்று நின்றால் நம்மை பெற்றவருடன் உள்ள உறவு நிலை பாதிப்பதோடு தாய்மை பேறு பெருவதையும் தடுக்கிறது, பெண்கள் ஜாதகத்தில் சந்திரன் கேது சேர்க்கை பெற்றவர்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகும் நிலையை காணலாம்.

மாத்ரு தோஷ பரிகாரங்கள்:

மாத்ரு தோஷ பரிகாரங்கள்:

1. எந்த ஒரு தாயும் தன் குழந்தைகளுக்கு தீங்கு நினைக்கவும் மாட்டாள். சாபமிடவும் மாட்டாள். என்றாலும் சில நேரங்களில் தாய் மனம் வருந்தும்படி நேர்ந்தால் அது மாத்ரு தோஷமாகிறது. மாத்ரு தோஷத்திற்க்கு முதன்மையான பரிகாரம் தாய் உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக இருக்க செய்வது. இறந்தபின் பித்ரு கடன்களை சரிவர செய்வது.

2. உலக அன்னையான புவனேஸ்வரியை திங்கள் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வணங்கி வருவது.

3. சந்திரஸ்தலமான திங்களுர், திருப்பதி, குணசீலம் போன்ற கோயில்களுக்கு சென்று வணங்கிவருவது.

4. திருச்சி மலைகோட்டை தாயுமானஸ்வாமியை முக்கிய தினங்களிலும் சந்திரன் ஆதிக்கம் பெற்ற தினங்களிலும் தரிசித்து வணங்குவது

5. அன்னை வயதில் முதியோர் இல்லங்களிலும் அனாதை ஆஸ்ரமத்திலும் இருக்கும் பெண்களுக்கு பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் உணவு, ஆடை, மூக்குக்கண்ணாடி போன்ற பொருட்களை வழங்கி ஆசி பெறுவது.

6. எக்காரணம் கொண்டும் தாய் மற்றும் மாமியார் போன்றவர்களை வேலை வாங்கி துன்புறுத்தாமல் இருப்பது.

- அஸ்ட்ரோ சுந்தர ராஜன்

9498098786

 
 
 
English summary
Mother’s Day is always celebrated on the second Sunday in May. It’s not a federal holiday, however it’s widely celebrated as a special day to honor all mothers and motherhood. Together, let’s honor the women who raised us—and all the mothers who sacrificed for their children. Although the custom of setting aside a day to honor mothers has ancient roots, our observance of Mother’s Day originated in 1907 with the efforts of a devoted daughter, Anna M. Jarvis of Philadelphia, who conceived the idea of an annual nationwide celebration. The public and the press quickly embraced the idea, and villages, towns, cities, and states soon began unofficial Mother’s Day observances. On May 8, 1914, President Woodrow Wilson signed a proclamation designating the second Sunday in May Mother’s Day, and within a few years, the idea gained worldwide prominence.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X