கும்ப ராசிக்கு ராகுவிடம் இருந்து விடுதலை.. நவம்பர் மாதத்தில் நடக்கும் பிரம்மாண்ட மாற்றம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் கும்ப ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

november-matha-palan-kumbam-rasi-people-will-achieve-huge-success-during-this-period

கும்ப ராசி பலன்

கும்ப ராசிக்காரர்களுக்கு இனி மிகப்பெரிய முன்னேற்றம் வரக்கூடிய அமைப்பாக இருக்கும். நவம்பர் மாதம் 12 ஆம் தேதியில் இருந்து செவ்வாய், குரு, கேது ஆகிய 3 கிரகங்களும் 7 ஆம் இடத்தில் சேருகின்றன. புதனும், சுக்கிரனும் பரிவர்த்தனை ஆகியுள்ளது மிகப்பெரிய யோகத்தைத் தரும். இதனால், எல்லா நிலைமைகளிலும் பெரிய முன்னேற்றங்கள் நவம்பர் 12 ஆம் தேதிக்குப் பிறகு வரும்.

மகிழ்ச்சி

இளைஞர்களுக்கு காதல் நிறைவேறும், காதல் வரும். மகிழ்ச்சியைத் தரக்கூடிய மாதமாக இந்த நவம்பர் மாதம் அமையும். அடுத்த மாதத்தில் இருந்து ராகு ராசியில் இருந்து வெளியில் போவதால் கஷ்டங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். முகத்தில் சிரிப்பு, சந்தோஷம் இருக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஜென்மசனி விலகினாலும் பெரிய பலனில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கும் இனி மகிழ்ச்சி பிறக்கும் மாதமாக இருக்கும்.

ராகுவிடம் இருந்து விடுதலை

3 வருடமாக ஜென்மசனியால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். பணத்தை இழந்திருப்பீர்கள், உழைப்பு வீணாகப் போயிருக்கும், மதிப்பு, மரியாதை, பணத்தை இழந்திருப்பீர்கள். நம்பிக்கை துரோகத்தை சந்திருப்பீர்கள். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். டிசம்பர் 5 ஆம் தேதி ராகு வெளியில் போவதால் தன்னம்பிக்கை ஏற்படும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வாழ்க்கை இனிமேல் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

கடன் தீரும்

கடன்களை அடைப்பதற்கான அமைப்பு உள்ளது. தொழில் நன்றாக இருக்கும். பிள்ளைகள் மேல் நம்பிக்கை வரும். குரு மங்கள யோகம் உருவாவதால் தொழிலை நம்பி தைரியாமாக ஆரம்பிக்கலாம். 10, 15 வருடங்கள் கும்ப ராசியினருக்கு நன்றாக இருக்கும் என்பதால் இந்த மாதத்தில் இருந்தே படிப்படியாக நம்பிக்கை ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். படிப்பு, தொழில், வேலை, வியாபாரம் என அனைத்திலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உழைப்பின் மூலமாக அதிக நன்மைகளைப் பெறக்கூடிய மாதமாக இந்த நவம்பர் மாதம் உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+