October Matha Palan: மேஷ ராசிக்கு விரையம் சனியிலும் ஜாக்பாட்.. பண மழை கொட்டப் போகுது
மேஷம் ராசி பலன்: 2025 அக்டோபர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில் சுக்கிரன் இந்த மாதம் நீச்சம் எனும் பலவீன நிலையை அடைகிறார். புதன் பகவான் மாறினாலும் குருவின் பார்வையில் வருகிறார். இந்த மாதம் பெரும்பால நாட்களில் செவ்வாய் குருவின் பார்வையிலேயே சுப அமைப்பில் நல்லவிதமாக இருக்கிறார்.

அதிசாரம் என்கிற முறையில் குரு பகவான் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உச்சம் என்கிற நிலைமையை அடைகிறார். ஏறத்தாழ 50 நாட்களுக்கு கடகத்தில் உச்சம் என்கிற நிலையை அடைவது 12 ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலன்களைக் கொடுக்கும். கெடுதல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு கெடுதல் நிற்கக்கூடிய நிலைமை உண்டாகும்.
ஒன்றுமே நல்லவை நடக்கவில்லை என்பவர்களுக்கு ஓரளவு நல்லது நடக்கும் அமைப்பு உண்டாகும். 12 ராசிக்காரர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மையைத் தரும் அமைப்பில் இந்த அக்டோபர் மாதம் அமையும். பெரிய அளவில் தீமைகள் எதுவும் தரும் அமைப்புகள் இல்லை. அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் பெறப்போகும் நன்மைகள், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மிக அற்புதமான மாதமாக இருக்கும். மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் கொடுக்கக்கூடிய அமைப்புகள் இப்போது உண்டு. ராசிநாதன் ராசியில் சுக்கிரன் வீட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை குரு பார்க்கக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கும். எல்லாவற்றிலும் திருப்தியை கொடுக்கும் அமைப்பு உண்டாகும்.
பதவி உயர்வு
வயதிற்கு ஏற்றாற்போல நன்மைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி அமைப்பு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு தொழில், வியாபாரம், உத்தியோகம், வேலை, விவசாயம் போன்றவற்றில் முன்னேற்றமான அமைப்பாக இருக்கும்.
குருவின் பார்வை
7 ஆம் இடத்தில் ராசிநாதன் இருந்தால் கணவன், மனைவி, உறவுகளில் நல்லவை நடக்கும் அமைப்பு ஏற்படும். திருமணத் தடைகள் இருப்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும். யார் கணவன், மனைவி என்ற வாழ்க்கைத் துணை அமைப்புகள் தெரியக்கூடிய நேரம். 7 ஆம் இடத்தில் சுக்கிரன் வீட்டில் ராசிநாதன் இருந்து குருவின் பார்வை இருந்தால் காதல் அனுபவங்கள் நன்றாக இருக்கும். பிரேக்கப் செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் கூட இன்னொரு வாய்ப்பு கொடுக்கும் நல்ல மாதமாக இருக்கும்.
சுக்கிரன் நீச்சம்
சுபமான நல்ல மாதமாக இருக்கும். மாதத்தின் பெரும்பகுதி சுக்கிரன் நீச்சம் என்கிற நிலையில் 6 ஆவது வீட்டில் இருக்கிறார். 15 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இப்போது இருப்பதைவிட நல்ல நிலைமைக்குச் செல்லும் நிலை உண்டாகும். பணம் கையில் இருந்து கொண்டே இருக்கும். பணவரவு அதிகரிக்கும்.
பாதிப்பு
ஏழரைச் சனி, 12 ஆம் இடத்தில் விரையச் சனி என்று அச்சப்படத் தேவையில்லை. 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடக்கக்கூடிய சனிப்பெயர்ச்சின் போது சனி பகவான் உங்கள் ராசிக்குள் நுழைவார். அப்போது கண்டிப்பாக சிறு பின்னடைவு, பாதிப்புகள் ஏற்படும். ஆனால், அதுவரை உங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 9 ஆம் பாவம் வலுத்திருந்து பாக்கியாதிபதி உச்சமடையும் நேரத்தில் நல்லவைகள் அனைத்தும் நடக்கும்.
பெண்களுக்கு சிறப்பு நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டம். கணவன், குழந்தைகள் மீது இருந்து வந்த மன வருத்தங்கள் விலகும். பெரிய அளவில் சோதனைகள் இல்லாத நல்ல மாதமாக இந்த மாதம் இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications