Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Simmam rasi palan: சுறுசுறுப்பாக மாறும் சிம்ம ராசியினர்.. இனி தொட்டதெல்லாம் துலங்கும்

Subscribe to Oneindia Tamil

Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

purattasi-month-2025-simmam-rasi-people-will-get-good-benefits-and-fortunes-during-this-purattasi-m

பண்டிகைகள்

பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொலு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

இந்த புரட்டாசி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசியில் இருந்த சூரியன் நல்லதையும், அல்லதையும் கொடுத்திருப்பார். தற்போது 2 ஆவது வீட்டில் சூரியன் அமர்வதால் இந்த மாதம் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஓடிக்கொண்டே இருப்பீர்கள். முடங்கிக் கொண்டிருந்த வேலைகள் எல்லாம் விரைவில் முடியும் சூழல் உள்ளது. தைரிய ஸ்தானத்தில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்திருக்கிறார்.

வீடு வாங்குவது, விற்பது

தடலாடியாக முடிவுகளை எடுப்பீர்கள். வீடுகளை வாங்குவது, விற்பது போன்றவற்றைச் செய்வீர்கள். எல்லாவற்றையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். தொய்வு நிலை எல்லாம் மாறும். ஒரு இடத்தை விற்றுவிட்டு இன்னொரு இடத்தை வாங்குவீர்கள். முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போடுவீர்கள். வீடு மாறுவதற்கான யோசனைகள் உங்களுக்கு அமையும். நல்ல வீடுகள் அமையும்.

திடீர் பண வரவு

புகழ்பெற்ற கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு ஆதரவாக புதனும், சுக்கிரனும் அமர்ந்துள்ளதால் மூத்த சகோதரர்கள் வகையில் சில உதவிகள் எல்லாம் கிடைக்கும. திடீர் பண வரவு உண்டாகும். கொடுத்து ஏமாந்த தொகை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அஷ்டமத்து சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

கவனம்

இந்த மாதம் முழுக்க உங்க ராசிநாதன் சூரியனை சனி பார்ப்பதால் காரம், உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம் நீங்கள் நினைப்பதை விட நன்றாக இருக்கும். லாபகரமாக இருக்கும். கடையை விரிவுபடுத்தும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடுமாற்றங்கள் நீங்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள்.

தொந்தரவுகள் நீங்கும்

சக ஊழியர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் குறையும். மகனுக்கு மணமகள் அமையும் வாய்ப்பு உண்டு. புது வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு எல்லா வகையான முன்னேற்றமும் கிடைக்கும். ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். நடைபாதையில் ஆதரவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுப்பது, பச்சைப் பயறு தானமாகக் கொடுப்பது மேன்மையைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+