New Year Rasi Palan: தனுசு ராசிக்கு சவாலான புத்தாண்டு.. அஷ்டமகுரு பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகுது
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
தனுசு புத்தாண்டு பலன்
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அஷ்டமத்தில் குரு பகவான் இருக்கிறார். ஜூன் வரைக்கும் உங்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சுபகாரியங்கள் அனைத்தும் நடக்கும். நல்ல காரியங்கள் எல்லாமே நடக்கும். 2 ஆம் குழந்தை பிறப்பதற்கான யோகம் உண்டாகும். இரண்டாம் குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.
ஆரோக்கியம்
ஜூன் மாதத்திற்குப் பிறகு கண்டிப்பாக ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றில் கழிவுகள் போகும் பாதை , தண்ணீர் வெளியே செல்லும் பாதையை பார்த்துக் கொள்ள வேண்டும். வயிறு உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கர்ப்பப்பை சார்ந்த விஷயங்களில், ரத்த அழுத்தத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
திருமண யோகம்
திரிகோணங்களில் பலம் மிகுந்த கிரகம் இருக்கும்போது எதிர்பார்க்காத பணம், திருமணம், வீட்டிற்கு எதிரான திருமணங்கள் ஏற்படுவதற்கான யோகம் உள்ளது. தாயின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய வாழ்க்கைத் துணை, வாழ்க்கை எல்லாம் நன்றாக இருக்கும். பணத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. விரயத்தை குரு பகவான் கட்டுப்படுத்துவார்.
பணம் கொட்டும்
அஷ்டமத்தில் குரு இருக்கும்போது நிறைய பணத்தைக் கொடுப்பார். பெரிய கிரெடிட் கார்டு, சிக்கலான லோன்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆனால், வேறு இடமாற்றம் ஏற்படும்.
செலவுகள் ஏற்படும்
குழந்தைகளுக்காக நிறைய செலவுகளைச் செய்வீர்கள். தப்பான விஷயங்களுக்குள் இறங்காமல் இருப்பது ஏற்றத்தை தரும். சட்டவிரோத செயல்களில் சிக்கும் அபாயமுள்ளதால் கவனம் தேவை. ஜெயிலுக்குச் செல்லக்கூடும் அளவுக்கு வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. இந்தப் புத்தாண்டில் பணம், பொருளாதாரத்தில் நிம்மதி ஏற்படும்.
100க்கு 70 மதிப்பெண்
பணத்துக்கான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத பெரிய லிப்ட் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை அதிகளவில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. சவாலான காலகட்டமாக இருக்கும். ஆனால், போராடி வெற்றி பெறுவீர்கள். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதாரம் 75 சதவீதம் நன்மைகள் உண்டாகும்.












Click it and Unblock the Notifications