Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Year Rasi Palan: 2026 இல் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்.. ராஜவாழ்க்கை வாழப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் 4 ராசிக்காரர்கள் யார், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

puthandu-palan-which-4-zodiac-signs-will-get-huge-success-and-lots-of-money-during-this-year

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும்.

இந்தப் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிக்காரர்கள் யார், அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஆட்சி அமைக்கக்கூடிய பாக்கியம் கண்டிப்பாக உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்டாயம் பதவி உயர்வு உண்டாகும். இந்தப் புத்தாண்டில் டாப் கிளாஸ் யோகம் பெறும் ராசி என்றால் அது கன்னி ராசியினர் தான். பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும். மேடைகள் ஏறும் பாக்கியம், மாலைகள் கழுத்தில் விழும் யோகம் உண்டு.

திருமணம்

திருமண யோகம் உண்டாகும். நண்பரையே திருமணம் செய்யும் வாய்ப்பு, காதல் திருமணம் கைகூடும் யோகம் உள்ளது. பெரிய பணங்கள் வந்து சேரும் அற்புதமான காலகட்டம். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களுடன் இருந்து வந்த கோபம், சண்டை, சச்சரவுகள் நீங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். மன தைரியம் உண்டாகும்.

பண வரவு கொட்டும்

நல்ல பெயர் ஏற்படும் சூழல் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டி கிரகப் பிரவேஷம் செய்யும் யோகம் உண்டாகும். எல்லோரிடமும் நட்பு பாராட்டுவீர்கள். தொட்ட அனைத்து காரியங்களும் ஹிட்டாகும் யோகம். கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக உள்ளன. மிகப்பெரிய பணம், பொருளாதாரம் உண்டாகும். நிறைய பேருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். அரசு அலுவலகங்கள், வங்கிகளில் வேலை கிடைக்கும். நிறைய பேருக்கு இடமாற்றத்துடன் வேலை கிடைக்கும். வெளியூர் சென்று செட்டிலாகும் யோகம் ஏற்படும்.

வழிபாடு

எலும்பு, தசை தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மறைமுக ஸ்தானத்தில் பிரச்சனைகள் பெரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சந்தோஷம் ரீதியாக 95 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 98 சதவீதமும் நன்மைகளைப் பெறுவீர்கள். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். ராஜகணபதி வழிபாடு செய்வது உங்களுக்கு அமோகமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு அமரப் போகிறார். குருவின் அருளால் அத்தனை நல்ல விஷயங்களும் உங்களுக்கு நடக்கும். தைரியம், தன்னம்பிக்கை, முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பார்வை பலம் ராசி, லக்கினத்தில் இருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். 100 சதவீதம் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

குரு, சனி இணைவு

பூர்வீக சொத்துகள் உங்கள் பெயர்களில் ரெஜிஸ்டர் செய்யும் அமைப்பு உள்ளது. மனதிற்கு பெரிய தெம்பு, தைரியம் ஏற்படும். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள், வாக்குவாதங்கள் நிவர்த்தியாகும். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்களிடம் நன்றாகப் பழகுவார்கள். உறுதுணையாக இருப்பார்கள். 2026 மார்ச், ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு எந்த கெட்டப் பெயரும் இல்லாமல் அற்புதமார வாழும் யோகம் ஏற்படும். 5, 9 க்கு உரிய பாவங்களில் திரிகோணங்களில் சனி, குரு இணைவு ஏற்படுவதால் நல்ல காரியங்கள், திருமணங்கள் நடக்கும் யோகம் உள்ளது. வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்யும் யோகம் ஏற்படும்.

சொத்துகள் கிடைக்கும்

பூர்வீக சொத்துகள் வந்து சேரும். செல்வாக்குகள் அபரிமிதமாக அதிகரிக்கும். பெரிய பெரிய இடங்களுக்கு நீங்கள் செல்லும் யோகம் உண்டாகும். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் நீங்கள் ராஜாவாக மாறும் யோகம் ஏற்படும். பெரிய வளர்ச்சி, தன்னம்பிக்கை ஏற்படும். மடாதிபதிகள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். பெரியவர்களின் ஆசிர்வாதங்களை நீங்கள் வாங்குவீர்கள்.

அடுத்தடுத்து யோகம்

பூஜை, புனஷ்காரம், ஆன்மீகம் என எல்லா விஷயங்களிலும் இறங்குவீர்கள். நிறைய விருச்சிக ராசியினர் நீதிபதிகளாகும் வாய்ப்புகள், வெளியூர், வெளிநாடுகளில் செட்டிலாகும் யோகம், பேராசிரியர்களாகும் யோகம் என அனைத்து அமைப்பும் உள்ளது. 2026 இல் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புள்ளது. பலமான ஸ்தானமாக உள்ளது. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கும்.

வழிபாடு

சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 95 சதவீதம் நன்றாக இருக்கும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும். தாய், தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது அற்புதமான யோகத்தை கொடுக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இதுமாதிரியான நேரம் உங்களுக்கு அமைந்துள்ளதால் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மகரம் புத்தாண்டு பலன்

மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அருமையான புத்தாண்டு. முழுக்க முழுக்க தெய்வ அனுக்கிரகம் இந்த ஆண்டு முழுவதும் ஏற்படும். விஐபி யோகத்தைப் பெறுவீர்கள். பெரிய விருதுகள், அங்கீகாரம், திருமண யோகம், புத்திர பாக்கியம் என அனைத்தும் கிடைக்கும். எந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடக்க வேண்டுமோ, அத்தனை விஷயங்களும் நடக்கும்.

அதிர்ஷ்டம்

3 ஆம் இடத்தில் சனி இருப்பதால் அசாத்தியமான தைரியம் ஏற்படும். 3 ஆம் இடத்தில் சனி இருப்பதால் உங்களை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. எல்லாமே உங்களால் செய்ய முடியும். எந்த விஷயத்திலும் கீழே விழுகாத நிலை ஏற்படும். உங்களுக்கு உதவுவதற்காக யாராவது காத்துக் கொண்டிருப்பார்கள். நிறைய பேருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும்.

பதவி உயர்வு

எதிர்பாராத பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மார்பகம், கட்டி, நெஞ்சகம், இருதயம், ரத்த செல்லும் வழிகளில் பிரச்சனை போன்ற விஷயங்களில் கவனம் தேவை. பார்ட்னர்ஷிப்களில் புதிய தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். அண்ணன், தம்பிக்குள் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நல்ல நெட்வொர்க்குகள் ஏற்படும்.

திருமண யோகம்

திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை ஏற்படும். சுபகாரியங்கள் உண்டாகும். ஸ்தான பலம் நன்றாக இருப்பதால் பணவரவு உண்டாகும். எந்த எதிர்மறையான விஷயங்களும் உங்கள் மேல் வராது. உங்கள் பேச்சைக் கேட்டு ஒரு நல்ல விஷயத்தை செய்யும் நிலை ஏற்படும். ஏ கிளாஸ் யோகம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்தில் வயிறு விஷயத்தில் கவனம் தேவை.

ஜாக்பாட்

2026 ஜாக்பாட்டில் 3 வது ராசியாக நீங்கள் தான் உள்ளீர்கள். அற்புதமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதமும் நன்மைகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு, குலெதய்வ தேர்த் திருவிழாவில் கலந்துகொள்வது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும்.

மீனம் புத்தாண்டு பலன்

மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான புத்தாண்டாக இருக்கும். இந்தப் புத்தாண்டில் 4 வதாக ஜாக்பாட் அடிக்கும் ராசி என்றால் அது நீங்கள். எப்போதும் சோகம், அழுகை, வேதனை என்று இருந்த காலம், கவலை எல்லாம் நீங்கும். திரிகோணத்தில் குரு வரப்போவதால் ஜூன் மாதத்திற்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகள் கைக்கு வரும்.

திடீர் பணவரவு

திடீர் பண வரவு உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் பேரக் குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டாகும். காதல், திருமணம் கைகூடும். பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பஞ்சம ஸ்தானம் வலிமையாக இருக்கும்போது விருதுகள், அங்கீகாரம் கிடைக்கும். நிரந்தரமான வேலை கிடைக்கும். அரசியல்வாதி, அரசியல்வாதிகள் தொடர்புகளில் இருப்பவர்களுக்கு ஆட்சியமைக்கும் யோகம் ஏற்படும்.

தேர்தலில் வெற்றி

தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு மீனத்திற்கு உள்ளது. வேலை, வியாபாரம், தொழிலில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். எதிர்பாராத வேதனை, அவமானம், துக்கம், அசிங்கம், ஆபத்து, ஜெயில் போன்றவை இனி உங்களை அண்டவே அண்டாது. அஷ்டமத்தில் குரு பார்ப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பல நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பார்க்காத அத்தனை நன்மைகள் ஏற்படும். முழு தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.

வழிபாடு

பாக்கிய ஸ்தானத்துக்கு நேரடியாக குரு இருப்பதால் வாழ்க்கையே மாறும். பெரிய பெரிய விஷயங்கள் எளிமையாக நடக்கும். திருப்தியும், வெற்றியும் கொடுக்கும். பெண்களுக்கு சூப்பரான காலகட்டமாக இருக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். சொந்த ஊருக்குச் செல்லும் யோகம் ஏற்படும். ஸ்ரீரங்கநாத பெருமாளை மனதார வணக்குவது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். மஞ்சள், குங்குமம் வாங்கி சுவாமிக்கு கொடுப்பது மிகப்பெரிய ஏற்றத்தை தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+