மிதுன ராசியினருக்கு கடன் பிரச்சனை ஓவர்.. மாற்றத்துக்கான நேரம் ஆரம்பம்.. இனி தொட்டதெல்லாம் துலங்கும்
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்கும் போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 9 இல் ராகு, 3 இல் கேது உள்ளார். திருச்செந்தூரில் முருகனை வழிபடுவது சகலவித நன்மைகளைத் தரும். தலைவலி, ரத்த அழுத்தம், இடதுபக்க தேக ஆரோக்கியம், தாய், தந்தை, சகோதர, சகோதரிகளின் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டில் பெற்றோர், மனைவி, கணவரிடம் கோபத்தை, கடுஞ்சொல் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
தடைகள் நீங்கும்
சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். துணைக்கு இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். தெய்வீக கைங்கரியங்களை அதிக அளவில் செய்வீர்கள். தாய் தந்தையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உத்தியோகம், தொழில், வேலை, வியாபாரம், கல்வியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இது மாற்றத்துக்கான நேரமாக உங்களுக்கு அமையும்.
ராஜமரியாதை
ஜீவசமாதி அடைந்திருக்கும் சித்தர்கள், ஞானிகள் வழிபாடு அனைத்துவிதமான பிரச்சனைகளையும் தடுக்கும். பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை நிமித்தமாக அலைச்சல் இருந்தாலும் பெரிய அங்கீகாரம், ராஜமரியாதை கிடைக்கும். அனைவராலும் புகழ்ந்து பாராட்டப்படுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கடன் தீரும்
தைரியமாக எந்தவித மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது. பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். தெய்வத்தின் கருணை உண்டாகும். தெய்வ தரிசனம், சித்தர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மகான்கள் தரிசனம் நல்ல பலன்களைத் தரும்.
முன்னேற்றம்
கொதிக்கும் நீரில் குங்குமப்பூ கலந்து குடிப்பது நல்ல பலன்களைத் தரும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications