ராகுகேது பெயர்ச்சி: பஞ்சமத்தில் குரு மீனத்துக்கு அடிச்ச ஜாக்பாட்.. கூரையை பிச்சுகிட்டு பணம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

Rahu ketu peyarchi Meenam Astrology

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.

2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீனம்: மீனம் ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கும் ராகு உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கப் போகிறார். யாரை நம்பி பணம் கொடுத்தீர்களோ அவர்களே திரும்ப வந்து உங்களிடம் பணத்தை சேர்ப்பார்கள். உங்கள் மீது பயம் வரும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். விரையத்தில் இருக்கும் ராகு குரு பார்வையில் அமருவதால் இடமாற்றம், ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றத்தால் நன்மை உண்டாகும்.

ஜென்மத்தில் சனி இருப்பதால் கொஞ்சம் தாமதமாக இருப்பது போல தோன்றும். ஆனால் அதில் எந்த தவறும் இல்லை. மாற்றத்தை செய்தால் போதும் அமோகமான பலன்கள் உண்டாகும். நல்ல நேரமாக இருக்கும். அயல்நாட்டிற்குச் சென்று குடியுரிமை வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். சங்கத்தில் சேர்ந்து பெரிய ஆளாகும் யோகம் உண்டு. மூத்தவர்கள் நம்மிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகி அதில் இருந்து பணம் வரக்கூடிய பிராப்தம் உண்டாகும்.

6 ஆம் இடத்தில் கேது இருப்பதால் அஜீரண கோளாறு தொடர்பான பிரச்சனைகள் வரும். சிலருக்கு வயிற்றில் சிறிய சதை வளருவதற்கான வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு உங்களுக்கு அதிஅற்புதமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் குரு சென்று ராசி, லக்னத்தைப் பார்ப்பது உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும். வேறு எந்த எதிர்மறையான ஆற்றல் இருந்தாலும் அவற்றை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும்.

விரைய ஸ்தானத்தில் ராகு அமருவதால் இரவில் முழித்திருக்க தோன்றும். ஆனால் முழித்திருக்காமல் தூங்க முயற்சி செய்வது நல்லது. நமக்கு கஷ்டம் கொடுத்தவங்களுக்கு திருப்பி கஷ்டத்தை தரும் சூழல் ஏற்படும். 12 ஆம் இடமான சூழ்ச்சி ஸ்தானத்தில் இருப்பதால் சூழ்ச்சியால் வெற்றி அடைவீர்கள். யாரோ ஒருவர் செய்த விஷயத்துக்கு உங்களுக்கு பலன் கொடுக்கும். நிறைய பண வரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். ஆடம்பர சுற்றுலா, இன்பச் சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள்.

வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான யோகம் உண்டாகும். அதிபயங்கரமான யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபப்படாமல் இருப்பது நல்லது. வீட்டில் இருப்பவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது. 6 ஆம் இடம் என்பது தனிமை உணர்வை கொடுக்கும். வீட்டில் இருந்து வெளியில் செல்லும் சூழல் உண்டாகும். எனவே, வீட்டில் பிளவு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வர்மா மருத்துவர்களைப் பார்ப்பது நல்லது.

வழிபட வேண்டிய தெய்வம் - மாசாணியம்மன் வழிபாடு, மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு அருமையான பலன்களைத் தரும். சங்கடங்கள், பாதிப்புகள் குறையும். இருக்கக்கூடிய இடம் உங்களுக்கு சாதகமாக மாறும், வெளிநாட்டில் இருப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+