ராகுகேது பெயர்ச்சி: விருச்சிகத்துக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும். உங்க ரூட்டு கிளியர் - போலாம் ரைட்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

Rahu ketu peyarchi Viruchigam Astrology

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.

2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீனம் ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்: கேது மிகவும் வலிமையாக இருக்கக்கூடிய இடம் விருச்சிகம். ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதனை கண்டுபிடித்து வந்துவிடுவார்கள். யாரும் சிந்திக்காத கோணத்தில் இருந்து ஒரு விஷயத்தை கொண்டு வரும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள், யாருக்கும் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் இவர்களுக்கு மட்டும் தெரியும்.

அமானுஷ்ய சக்திகளை மிக அதிகமாக கண்டறியக் கூடிய, உணரக் கூடிய பிராப்தம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகம் உள்ளது. 4 ஆம் இடத்தில் உட்கார்ந்துள்ள ராகு கேந்திரத்தில் 1, 4, 7, ஆகியவை மிகவும் முக்கியமான இடம். ராகு சென்று அமர்ந்திருக்கக் கூடிய இடம் 4. 4 ஆம் இடம்தான் சுக ஸ்தானம். பிரம்மாண்டமான வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

குரு பார்வை இருப்பதால் அந்த இடத்துக்கு நிறைய நல்லதுகள் நடக்கும். நீங்க போகும் வீடு நல்ல வீடாக இருக்கும். அப்பார்ட்மெண்ட் வைத்திருந்தால் விற்றுவிட்டு கையில் பணத்தை வைத்திருப்பார்கள். 2 ஆம் இடம் என்பது கையிருப்பு. 4 ஆம் இடம் என்பது தேவைக்கு அதிகமான பணம் இருக்கும். 4 ஆம் இடத்தில் ராகு வந்து குரு பார்வை இருப்பதால் உங்கள் வீட்டில் பண வைக்கக்கூடிய ஒரு பெட்டி கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும்.

தென்மேற்கு மூலையில் பீரோ வைத்துக் கொள்வது, அதில் பணத்தை சேமித்து வைப்பது நல்ல பலன்களைத் தரும். அடுத்த ஒரு வருடத்துக்கு பணம் அதிகளவில் வரும். சுக ஸ்தானம் என்பது வீடு மட்டுமல்ல காளை மாடு, பசு மாடு வாங்குவது, சோப செட், நல்ல மெத்தைகள் வாங்கும் யோகம் உண்டாகும். எந்த துறையில் இருந்தாலும் அருமையான காலகட்டமாக இருக்கும்.

புதிய பயிற்சிகள், பயோ கெமிஸ்ட்ரி பேஸ்டு, ஏஐ பேஸ்டு, மெடிசன் பேஸ்டு பயிற்சிகளை கற்றுக் கொள்வார்கள். நிறைய பேருக்கு வங்கிகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டில் உற்பத்தி துறையில் நல்ல பதவிகள் கிடைக்கும். அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

எந்த விஷயத்தையும் கொஞ்சம் கூட உணர்ச்சிகளே இல்லாமல் பார்க்கக்கூடிய நபர்கள் விருச்சிகக்காரர்கள்தான். சலனமே உங்களிடம் இருக்காது. விருச்சிகத்தைப் பொருத்தவரை மனதில் பட்டதை பேசவே மாட்டார்கள். நல்ல தைரியத்தைப் புகுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்தையும் நன்றாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

கேது தொழில் ஸ்தானம் எனும் 10 ஆம் இடத்தில் உட்காருவதால் டெக்னிக்கல் விஷயங்கள், தர மதிப்பீடு, எடிட்டிங், ஆராய்ச்சி, கெமிக்கல் ஆராய்ச்சி செய்பவர்கள், சட்டத் துறையில் இருக்கும் நபர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். வேலை, தொழில் நிமித்தமான சட்ட சவால்களை சந்திக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும். வேலை நன்றாக இருந்தாலும் எனக்குப் பிடிக்கவில்லை என்று வேலையை விட்டு வருவதற்கான வாய்ப்புள்ளது.

கேந்திரத்தில் ராகு உட்கார்ந்து குரு பார்ப்பதால் நிறைய பணம் காசுகள் வந்து சேரும். மார்புப் பகுதி பிரச்சனைகள் சரியாகும். மற்றபடி எந்த பாதிப்புகளும் இருக்காது. அமோகமான காலகட்டமாக இருக்கும். நினைத்தது நடக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இருக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: வேலையில் கவனமாக இருக்க வேண்டும். நல்ல மாற்றங்கள் உண்டாகும். முட்டி, கால் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பரிகாரங்கள்: அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். பெளர்ணமி தினத்தில் அன்னதானம் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். பிள்ளைகள் நன்றாக படிக்கும் யோகம் உண்டாகும். வேலையில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. ராகு கேது பெயர்ச்சியில் அனைத்துவிதமான நற்பலன்களும் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+