குரு, சனியின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் மேஷ ராசி.. 108 நாட்கள் கிடைக்கும் பலன்கள் என்ன?
மேஷம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி, லக்கினக்காரர்களுக்கு விரய ஸ்தானத்தில் சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். புதிய வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இருக்கிற வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வெளியூர், வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். கடனால் அதிப்படுபவர்களுக்கு கடனில் இருந்து வெளியில் வரும் யோகம் உண்டாகும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு
அலைச்சல் அதிகமாக இருந்தாலும் அதற்கான ஊதியம் கிடைக்கும். வேலை மாறக்கூடிய யோகம் உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, புதிய வேலைக்கு மாற்றம் பெற நினைப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாகக இருக்கும். 2, 6, 9 ஆம் இடத்துக்கு சனியின் பார்வை இருக்கிறது. இதனால், குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை, கணவர் உங்களை விட்டுப் பிரிந்து செல்லும் யோகம் உண்டாகும். நிறைய சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும்.
சுற்றுலா செல்லும் யோகம்
தெய்வ அனுக்கிரகத்தால் ராமேஷ்வரம், காசி, கயா செல்லும் யோகம் உண்டாகும். ஆன்மீக சுற்றுலாச் செல்லும் யோகம் ஏற்படும். குழந்தைகளுக்காக மிக முக்கியமான முதலீடுகளைச் செய்யத் தொடங்குவீர்கள். குழந்தைகளின் படிப்புக்கு கட்டணம் கட்டுவது போன்றவற்றை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருக்கும் மேஷ ராசியினருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும்.
வெற்றி மேல் வெற்றி
பெரிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும் யோகம் உண்டாகும். விரயத்தில் குருவின் நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கியத்தில் கொழுப்பு தொடர்பான விஷயங்கள், சுழுக்கு போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
வழிபாடு
அருகில் இருக்கும் பெருமாள் கோயில்களுக்கு தேன், பசு நெய் போன்றவற்றை தானமாகக் கொடுப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications