Rasi Palan: மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்கான பலன்கள்.. மார்ச் மாதத்தில் யாருக்கு அதிர்ஷ்டம்
March month rasi palan: சந்திர கிரகணம், சனிப்பெயர்ச்சி என மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் மாற்றங்கள், பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும்.

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் மார்ச் மாத பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றம், முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். பணத்தை சேமிக்கும் யோகம் உண்டாகும். வேலை மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகு அதற்கான அனுமதிகள் கிடைக்கும். மிகப்பெரிய நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். முயற்சிகள் பலிக்கும் நல்ல காலகட்டம். நல்ல நல்ல நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.
சட்டப்பூர்வமான போராட்டங்களில் இருப்பவர்களுக்கு அதற்கான வெற்றிகள் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். திருமணத்தை உறுதி செய்வீர்கள். சுக்கிரன் உச்சமாக இருப்பதால் காதல் மலரும். காதல் வாழ்க்கை இனிக்க ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்து போன என்ற எண்ணம் இருந்தவர்களுக்கு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற தன்னம்பிக்கை நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
ரிஷபம் மார்ச் மாத பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் உச்சத்தை அடைவதால் வீடு விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், வண்டி வாகனம் வாங்குவதில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குறைகள் நீங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும், 2 ஆம் இடத்தில் குரு, 11 ஆம் இடத்தில் உச்ச சுக்கிரன் இருக்கின்றனர். ராசிநாதனான சுக்கிரன் உச்ச அமைப்பில் இருப்பதால் நன்மைகள் ஏராளமாக ஏற்படும்.
எல்லா முன்னேற்றங்களும் ஏற்படும் காலகட்டம். முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். பெரிய அளவில் பண வரவு உண்டாகும். ராசிநாதன் 11 ஆம் இடத்திலேயே உச்சத்தை அடையவுள்ளார். சூரியனும் 11 ஆம் இடத்திற்கு வருவது மிகப்பெரிய நல்ல அமைப்பாகும். அம்மாவுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கக்கூடிய அமைப்புள்ளது.
மிதுனம் மார்ச் மாத பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் அருமையான முன்னேற்றத்தைக் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கும். 9 ஆம் பாவம் ராசிநாதனுடைய இருப்பால் மிகப்பெரிய சுபத்தன்மையை அடைந்துள்ளது. போக வேண்டும் என்று விரும்பிய கோயில்கள், இடங்கள், சித்தர் கோயில்களுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். கெளரவம் உயரக்கூடிய அமைப்புள்ளது. இதுவரைக்கும் முடிக்க முடியாத சில விஷயங்களை இந்த காலகட்டத்தில் நடத்தி முடிப்பீர்கள்.
தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். சில பேருக்கு தெய்வ பக்தி, அனுகூலம் அதிகமுள்ள தன்மை ஏற்படும். தெய்வ பக்தி, தெய்வ அனுகூலம் அதிகரிக்கும் நல்ல காலகட்டம். 15 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் உச்சமாகி 10 ஆம் இடத்தை தொடர்பு கொள்வதால் யோக பலன்களை அள்ளிக் கொடுக்கும். எல்லா விஷயங்களிலும் நன்மைகள் பெறும் காலகட்டம். வீட்டில் மங்களச் சத்தம் கேட்கும். சுப காரியங்கள் எல்லாம் உங்கள் வீட்டில் நடக்கும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications