Rasi Palan This Week: ரிஷபத்திற்கு லட்சுமி நாராயண யோகத்தால் கொட்டும் அதிர்ஷ்டம்..இதில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷபம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம். மகிழ்ச்சி பொங்கும். முழு சுபகிரகங்கள் எனும் புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குகின்றன. காசு பணம், சந்தோஷம், உல்லாசம் என மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும் சூப்பரான நேரம். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
நண்பர்களால் இடையூறு
வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவருக்கு பரிசு கொடுப்பது, மனைவிக்கு பரிசு கொடுப்பது என மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அஷ்டமத்தில் சூரியன், செவ்வாய் குரு வீட்டில் சேர்ந்திருக்கிறது. அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனியின் பார்வை, செவ்வாய் பார்வை இருக்கிறது. அஷ்டம ஸ்தானத்தில், லாப ஸ்தானத்தில் பிரச்சனை இருப்பதால் நண்பர்களால் இடையூறு ஏற்படும்.
நண்பர்களையும், மூத்தவர்களையும் தூரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாட்டி தாத்தாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. வியாபாரம் நன்றாக இருக்கும். சந்தோஷம் ஏற்படும். உடம்பு ஃபிட்டாக இருக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம்
இந்த வாரம் முழுக்க முழுக்க நிறைய ஏற்றங்களைக் கொடுக்கும். தாய், தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அனுமன் வழிபாடு நன்மையைத் தரும். நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது.
தனிப்பட்ட முறையில் சிறு வாக்குவாதங்கள் கூட சங்கடத்தை ஏற்படுத்தும். சட்டவிரோதமானவர்களின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில், வியாபாரம், படிப்பு, பழக்கவழக்கம், வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அனுமன் சாலிஷா கேட்பது மேன்மையைத் தரும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications