Rasi Palan This Week: அடித்து ஆடும் ரிஷப ராசி.. தொட்டதில் எல்லாம் ஜெயம்
வார ராசி பலன்: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். நிலம் சம்பந்தப்பட்ட, வீடு சம்பந்தப்பட்ட, கொடுக்கல் வாங்கல், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அற்புதம் ஏற்படும். மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். உணவு ஜீரண விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஏற்றம்
தனிப்பட்ட முறையில் நல்ல ஏற்றத்தைப் பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்த பாரங்கள் அனைத்தும் நீங்கும். தொழில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். மனதில் உள்ள பாரங்கள் தீரும் காலகட்டம். எல்லா விதமான நல்ல விஷயங்களும் நடக்கும். சந்தோஷங்கள் நிறைந்து காணப்படும். முன்னேற்றம் மிகுந்தளவில் ஏற்படும்.
தடைகள் நீங்கும்
மனப் பதட்டங்கள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். தொழில், உத்தியோகம் வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட தடைகள் எல்லாம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு அலர்ஜி, ஒவ்வாமையால் மனதிற்கு கஷ்டங்கள் ஏற்படும். அழகில் அக்கறை கொண்ட ரிஷப ராசியினர் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்புள்ளது. அலட்சியப்படுத்திவிட்டு செல்வது நல்லது.
வழிபாடு
கடல் கடந்து தொழில், உத்தியோகம் செய்பவர்கள் திடீர் நெருக்கடிகள் காணப்பட்டாலும் அதனை எளிதாக கடந்து செல்லும் பாக்கியம் ஏற்படும். தெய்வ வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications