Sani Peyarchi: துலாம் ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. அதிர்ஷ்டத்தை கொடுக்கும் சனி பகவான்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கும் ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

sani-peyarchi-2025-benefits-remedies-and-things-to-be-careful-of-for-libra-thulam-people-during

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். துலாம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். எல்லோருடைய உதவியும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைக்கும். 3, 6, 10 ஆம் இடத்தில் சனி பகவான் இருந்தால் உத்தியோகம், வேலை என அனைத்திலும் நல்ல காலமாக இருக்கும். எதிரிகளை வேரோடு அழியும் காலகட்டமாக இருக்கும்.

இனி ஏறுமுகம்தான்

சனி 6 ஆம் இடத்தில் அமரும்போது எதிரியின் பரம ரகசியத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, வெற்றி காணும் காலகட்டமாக இருக்கும். தனி வழியில் முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி காண்பீர்கள். குருவின் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் நல்ல பணம் சம்பாதிக்க கூடிய காலகட்டமாக இருக்கும். குடும்பத்தை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றிக் கொண்டு போகும் காலகட்டமாக இருக்கும். செட்டிலாக கூடிய காலகட்டமாக இருக்கும்.

உறவினர்கள் மத்தியில் மதிப்பு

சொந்தக்காரர்கள் மதிக்கும்படியான வாழ்க்கை உண்டாகும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உண்டாகும். துலாம் ராசியினருக்கு கடன் கேட்டால் உடனடியாக கிடைக்கும். கடனை அடைத்து புதிய கடன்களை வாங்குவீர்கள். மருந்து, நோய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறையும். சொத்து தகராறுகள், அலுவலக ரீதியான வழக்குகள், பஞ்சாயத்துகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆளுமைத் திறன்

ஆளுமைப் பண்பு அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இருப்பினும் குரு பார்வை ராசியின் மீது இருப்பதால் தன்மேல் தான் தவறு என உணர்ந்து குடும்பத்துடன் ஒன்று சேர்வீர்கள். இந்த மாதிரியான நல்ல நேரம் மீண்டும் வராது. அந்த அளவுக்கு அருமையான வளர்ச்சியைத் தரும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்

வயிறு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. புளி நிறைந்த உணவுகள், பழைய உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது

வழிபட வேண்டிய தெய்வம்

தன்வந்திரி வழிபாடு வியாழக்கிழமை தோறும் செய்வது அருமையான பலன்களைத் தரும்.

மதிப்பெண்

சந்தோஷத்தின் அடிப்படையில் 80 சதவீதம் நன்றாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் 95 சதவீதம் சூப்பராக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+