அடிச்சு கேட்டாலும் பண்ண கூடாது.. சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்கான வார்னிங்!
சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சிம்மம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம் - சிம்மம் ராசிக்கு சனி பகவான் எட்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம் கண்டக சனி விலகி அஷ்ட சனி தொடங்கவுள்ளது. குருவின் வீட்டில் சனி பகவான் அமரவுள்ளார். குரு பார்வை கும்ப ராசியில் விழுவதால், கடந்த முறை கடக ராசிக்கு ஏற்பட்ட அளவுக்கான பாதிப்புகள் உங்களுக்கு வராது என்று நம்பலாம். லக்னத்தில் 11 ஆவது இடம் என்பது லாப ஸ்தானம்.
தடை அதை உடை
இதன் காரணமாக அடுத்த ஒரு வருடத்துக்கு பெரியளவுக்கு பிரச்னை இருக்காது. சின்ன சின்ன தடைகளுக்கு பிறகு வெற்றிகள் கிடைக்கும். முதல் முயற்சி வெற்றியடையவில்லை என்று மனம் தளராமல் அடுத்தடுத்து முயற்சிகளை நம்பிக்கையுடன் செய்வதால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
நீங்கள் எதிர்பாராத அல்லது திட்டமிடாத காரியங்களில் திடீர் வெற்றி கிடைக்கும். வருகிற மே மாதம் ஏழாம் இடத்துக்கு ராகு பெயர்ச்சி ஆவதால் சனியின் கெடு பலன்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். எனவே அஷ்டம சனியை நினைத்து மிகப்பெரியளவுக்கு பயப்பட வேண்டியதில்லை.
மனஸ்தாபம்
அஷ்டம் சனி காரணமாக சிம்ம லக்னம் அதிகம் பாதிக்கப்படும் பணிச்சுமை அதிகரிக்கும். பணியில் அழுத்தம் உண்டாகும். இருவர் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் ஒருவர் செய்ய வேண்டிய நிலை வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். உங்களுக்கு பிடிக்காத பணியிட மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் மன உளைச்சல் ஏற்படும்.
மதிப்பெண்
தொழில், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 100க்கு 70 சதவீதம் சிறப்பாக இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்
உங்களின் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான பழக்க வழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக உங்களுக்கு தொடர்பில்லாத சமாச்சாரங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் அவமானங்களை சந்திக்க நேரிடும்.
சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அவசியம். எதிலும் பொறுமை அவசியம். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. நியாபக மறதி, தேவையில்லாத பிரச்னைகள் உருவாகும். வம்பு, வழக்குகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் தேவை.
பரிகாரம், வழிபாடு
மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் செய்வது நல்ல ஏற்றத்தை கொடுக்கும். ஒரு நாள் மௌன விரதம் இருப்பது நல்ல வெற்றியை கொடுக்கும். அருகில் உள்ள ஆஞ்சிநேயர் கோயில்களுக்கு சென்று மண்டியிட்டு வழிபடலாம்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications