சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் சனி பகவானை வழிபடுவது எப்படி?.. எத்தனை நாட்களுக்குள் வழிபட வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி தொடங்கியதில் இருந்து 90 நாட்களுக்குள் திருநள்ளாறு சென்று வழிபடுவது ஏராளமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், திருநள்ளாறில் எவ்வாறு சனி பகவானை வழிபட வேண்டும், என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சனி கதிர்கள் அதிகம் வீசும் தலம்

உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. சனி பகவானுக்குரிய அற்புதமான திருத்தலமாகும். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது. சனிக் கதிர்கள் அதிகம் விளக்கூடிய நல தீர்த்தம். அதனால்தான் அந்த நல தீர்த்தத்தில் கை கால்கள் கழுவிவிட்டு குளிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. நளதீர்த்தத்துக்குப் போகாமல் சனீஸ்வரர் கோயிலுக்குப் போகக் கூடாது.

sani-peyarchi-how-to-worship-lord-sani-in-thirunallar-and-what-things-to-follow

குளங்களை அசுத்தப்படுத்த கூடாது

பாண்டிச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருநள்ளாறு. இந்த கோயிலுக்குச் செல்லும்போது குளத்தில் குளிக்கும்போது அதனை அசுத்தப்படக் கூடாது. தண்ணீரை அசுத்தப்படுவது தெய்வ குற்றமாகும். புனிதத்தின் உச்சமாக குளம், நீர் பார்க்கப்படுவதால் அதனை பேணிக் காப்பது நல்லது. நளதீர்த்தம் என்பது மிகவும் புனிதமாகும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் திருநள்ளாறில் உள்ள நளதீர்த்தத்தை வீட்டுக்கு எடுத்து வந்து தெளிப்பது நல்லது.

திருநள்ளாறு விபூதி, குங்குமம்

அதேபோல, திருநள்ளாறு திருநீரையும், குங்குமத்தையும் வீட்டிற்கு கொண்டு வரலாம். திருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு மற்ற பொருள்களை கொண்டு வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூக்களை கொண்டு வந்தால் காலடி படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மரங்களில் அல்லது நீர்நிலைகளில் அந்தப் பூக்களைப் போடுவது நல்லது. திருநள்ளாறு கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வது மிகவும் நல்லது. வெளிநாட்டில் இருப்பவர்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செல்லலாம்.

திருநள்ளாறுக்கு சனிக்கிழமைதான் செல்ல வேண்டுமா?

சனிக்கிழமை அன்று தான் திருநள்ளாறுக்கு செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. அஷ்டமி, நவமி என எந்த நாட்களில் வேண்டுமானாலும் கோயிலுக்குச் செல்லலாம். சனிப்பெயர்ச்சி என்றவுடன் உடனடியாக செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. 90 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் சென்று வழிபடலாம். இரவில் தங்கி வழிபட வேண்டும் என்று அவசியம் இல்லை.

முதலில் வழிபட வேண்டிய தெய்வம்

திருநள்ளாறு நள தீர்த்தத்தில் குளிப்பது நல்லது. குளிக்க முடியாதவர்கள் கை, கால், முகங்களை கழுவுவது நல்லது. இதனை செய்து முடித்தவுடன் நேராக சனீஸ்வரரிடம் செல்லக் கூடாது. குளத்தங்கரையில் இருக்கும் சொர்ண விநாயகரை முதலில் தேங்காய் உடைத்து, வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். தேக ஆரோக்கியம், சங்கடங்கள், குடும்பத்தில் பிரச்சனை என என்ன பிரச்சனைகள் இருந்தாலும் மனதார வழிபடுவது நன்மையைத் தரும்.

எப்படி வழிபடக் கூடாது

உங்கள் பிரச்சனையை தீர்த்துக் கொடுக்க வேண்டுவது நல்லது. ஆனால் பிரச்சனையை தருபவர்கள் அழிய வேண்டும் என்று வேண்டாமல் இருப்பது நல்லது. தேங்காயில் கற்பூரம் ஏற்றி விநாயகரை வலம் வந்து சிதறு தேங்காய் உடைப்பது நல்லது. பின்னர் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவி விட வேண்டும். பின்னர், திருநள்ளாறுக்குச் சென்று சனி பகவானை வழிபடலாம்.

சனீஸ்வரரை வழிபடும் முறை

சனீஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததும் படிக்கட்டை தொட்டு கும்பிடுவது மற்றும் ராஜகோபுரத்தை வணங்குவது நன்மையைத் தரும். கோயிலின் வாசற்படி மாடத்தில் தான் சனீஸ்வரர் தங்கியிருக்கிறார் என்பது ஐதீகம். நல்லெண்ணெய், அன்னதானத்துக்கு தேவையான பொருட்களை மடப்பள்ளியில் வழங்குவது நல்லது. சனி கோயிலுக்கு உள்ளே சென்றதும் சனி பகவானை முதலில் வழிபடுவது நல்லது. நல்லெண்ணெய், பசு நெய் போன்றவற்றை தானமாக அளிப்பது அமோகமான பலன்களைத் தரும். நவக்கிரக சாந்தி ஹோமம், அர்ச்சனை போன்றவற்றை செய்யலாம்.

தானமாக கொடுக்கும் பொருள்கள்

சனீஸ்வர பகவானுக்கும், தர்பாரண்யேஸ்வரர், அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், தேங்காய், எண்ணெய்கள், விபூதி, குங்குமம், தயிர், சந்தனம், வாசனை திரவியங்கள் போன்ற அபிஷேக பொருள்களை வாங்கி கொடுக்கலாம். சுவாமியின் அபிஷேகத்தை கண் குளிர காண்பது நல்ல பலன்களைத் தரும். சனீஸ்வரர் கோயில் அன்னதானம் அளிப்பது மிகவும் நல்லது. அரிசி, பருப்பு, குருமிளகு போன்ற எதை வேண்டுமானாலும் தானமாக கொடுக்கலாம்.

சனி பகவானை கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டுமா?

சனி பகவானை கும்பிட்டுவிட்டு நேரடியாக வீட்டுக்கு வர வேண்டும் என்பது இல்லை. மற்ற கோயில்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் மீண்டும் எதாவதொரு விநாயகர் வழிபாட்டை செய்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு மற்ற எல்லா இடங்களுக்கும் செல்லலாம். கோயிலில் இருந்து விபூதி போன்றவற்றை கட்டாயமாக எடுத்து வரலாம்.

பாவ விமோச்சனம்

திருநள்ளாறில் சனீஸ்வரருக்கே பாவ விமோச்சனம் கிடைத்த இடம். சனிக்கு ஏற்பட்ட பிரச்சனையே தீர்ந்த இடம் என்பதால் அங்கிருந்து விபூதி, பிரசாதம் போன்றவற்றை எடுத்து வரலாம். தங்க காக வாகனத்தில் சனி பகவான் வருவதை முடிந்தால் தரிசனம் செய்வது நல்ல பலன்களைத் தரும். இந்த சனிப்பெயர்ச்சி அனைத்து விதமான நல்ல பலன்களையும் பெற வாழ்த்துகள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+