சனிப்பெயர்ச்சி: ஜாவா சுந்தரேஷனாக மாறும் கடக ராசியினர்.. இனி அதிர்ஷ்டம் ஜெட் வேகத்தில் கொட்டும்
சனிப்பெயர்ச்சி: நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் நல்ல பலன்களையும், கெட்ட பலன்களையும் சமமாக கொடுக்க கூடியவர். இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம் ராசியினருக்கு அபரிமிதமான பலன்களை சனி பகவான் கொடுக்கப் போகிறார். கடக ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களின் பெயர்ச்சிகளில் முக்கியமான பெயர்ச்சியாகப் பார்க்கப்படுவது சனி பகவான் தான். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

நாம் செய்யும் கர்ம பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு சுப, அசுப பலன்களை தரக்கூடியவர் சனீஸ்வர பகவான். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கவுள்ளது. அதில் கடக ராசியினரும் ஒன்று அடுத்த இரண்டரை ஆண்டுகள் சனி பகவானால் என்னவிதமான அதிர்ஷ்டம் கடக ராசியினருக்கு கிடைக்கப் போகிறது என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம் - கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. வாழ்க்கையில் எதாவது சாதிக்க மாட்டோமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. உங்க ராசிக்கு அஷ்டம சனி விலகி 9 ஆம் இடத்துக்கு வருகிறார். வெளிநாட்டு வாய்ப்பு, வெளிநாட்டு வேலை, பயணம், தொழிலில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் சாதனை உண்டாகும்.
உள்ளூரில் ஜெயித்துக் காட்டுவதில் பல ஏமாற்றங்களையும், துரோகங்களையும் சந்தித்திருப்பீர்கள். ஏங்கித் தவித்த உங்களுக்கு வெளியூர் சென்று தொழில், வேலை செய்பவர்களுக்கு மகத்தான மாற்றம், முன்னேற்றம் உண்டாகும். வெளிமாநிலம், வெளிநாடு, வெளியூரில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம், லாபம் உண்டாகும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் இருப்பவர்களுடனான பழக்கம் உண்டாகும்.
பெரிய தொழில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு, நல்ல லாபம், வருமானம், ஊதியம் அங்கீகாரம் கிடைக்கக்கூடிய காலகட்டம். வீடு கட்டும் யோகம் உண்டு. வங்கிகளில் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தொழிலுக்கான கடன், தொழில் தொடங்கும் யோகம் உண்டு. அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு நல்ல லாபம் ஏற்படும்.
எவ்வளவு கடன்கள் இருந்தாலும் அதனை அடைத்து முன்னேற்றம் காணும் வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்குள் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மூன்றாம் நபர்கள் தலையீடு இல்லாமல் உங்கள் பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்வது நல்லது. பிற நபரை குடும்ப விஷயத்துக்குள் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.
9 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் 11 ஆம் இடத்தையும் பார்ப்பதால் இடம் சம்பந்தமான பிரச்சனை நீங்கும். அதிர்ஷ்டம் 100 மடங்காக கிடைக்கும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நிதானமாக, யோசித்து செயல்பட்டால் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் வாய்ப்பு உண்டு. 95 சதவீத நல்ல பலன்களை இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications