சனிப்பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு லாப சனி.. வாழ்க்கையில் ஏற்றமா?.. இறக்கமா?.. முழு விவரம் இதோ
சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு லாப சனிஎப்படி இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
நம்முடைய ஜாதகத்தில் 4 வீட்டை சனி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சனி ஒரு வீட்டில் இருக்கும் அந்த வீட்டு பலன்கள் சனி பகவானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 3, 7, 10 பார்வைகள் மூலமாக இன்னொரு 3 வீட்டை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த இரண்டரை காலம் சனிப்பெயர்ச்சியின் தாக்கமே அதிகளவில் இருக்கும்
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் தொழில் ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் ரிஷப ராசியினருக்கு லாப ஸ்தானத்துக்கு செல்கிறார். இந்த லாப சனியால் ரிஷப ராசியினருக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமருவது மிகவும் பாக்கியமான அமைப்பாகும். பத்தாம் இடம் எனும் தொழில் ஸ்தானத்தில் இருந்தபோது தொழிலில் நிலையற்ற தன்மையை சனி பகவான் கொடுத்திருப்பார். திடீர் வருமானம், வருமான இழப்பு போன்ற ஏற்ற இறக்கமான சூழலே இருந்திருக்கும். செய்யும் தொழில், வேலையில் கஷ்டம், மனக் குழப்பத்திலேயே இருந்திருப்பீர்கள்.
இப்படிப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் உங்களைவிட்டு 100 சதவீதம் மாறப் போகிறது. ரிஷப ராசியில் 11 ஆம் இடத்தில் சனி பகவான் அமருவதால் அற்புத பலன்களை கொடுக்கப் போகிறார். குடு, ராகு கொடுப்பதை சனி கொடுப்பார். ஆனால், சனி கொடுப்பதை எவர் தடுப்பார் என்பதுபோல அனைத்து விதமான நன்மைகளையும் உங்களுக்கு வாரி வழங்கப் போகிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியில் அனைத்துவிதமான கடன்களையும் அடைத்து நிம்மதியாக வாழ்வீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களது ஆசைகள், நோக்கங்கள் நிறைவேறும். அந்த ஆசைக்காக நீங்கள் கடினமாக உழைக்க நேரிடும். அதில் வெற்றி, முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் ஆர்வம், ஈடுபாடு அதிகரிக்கும். பணி பளு அதிகரித்தாலும் இருப்பினும் சிறப்பாக செயல்பட்டு அங்கீகாரம் பெறுவீர்கள்.
லாப சனி என்பதால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். தற்போது இருக்கும் அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றி காண்பீர்கள். குறிப்பாக, நீண்டகாலமாக திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். மூத்த சகோதர, சகோதரியின் ஆதரவு உண்டாகும். உங்களது பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவி உறவு மேம்படும். சிறு சிறு சண்டைகள் வந்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வரவு செலவுகளை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. விடாமுயற்சி, கடின உழைப்பால் பொருளாதார இலக்குகளை கட்டாயம் அடைவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு சேமிப்பும் உங்களது எதிர்கால வாழ்க்கைக்கு பயனாக அமையும்.
முதலீடு சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மொத்தத்தில் இந்த ரிஷப ராசியினருக்கு அனைத்து நல்ல பலன்களையும் அள்ளிக் கொடுத்தாலும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி, உணவில் கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்வது நல்ல பலன்களைத் தரும். ஒவ்வொரு சனியன்றும் அனுமன் மற்றும் சனி பகவானை வழிபடுவது நல்லது. நேர்மையாக இருப்பது அனைத்து முன்னேற்றங்களையும் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications