சனி பெயர்ச்சி பலன் 2023: கும்பத்திற்கு இடம் மாறும் சனி பகவான். கோடிகளில் புரளும் யோகம் யாருக்கு?
சென்னை: சனி பகவான் தனது வீடான மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஜனவரி 17ஆம் தேதி தை 3ஆம் தேதி சனி பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழ உள்ளது. மகர ராசியில் அவிட்ட நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் இருந்து அவிட்ட நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு இடம்மாறுகிறார். 2025ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். அவ்வப்போது வக்ர கதியில் பின்னோக்கியும் சென்று வருவார் சனிபகவான்.
கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் சிம்ம ராசியையும், பத்தாம் பார்வையால் விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார் சனி பகவான்.

மேஷ ராசியில் ஏற்கனவே ராகு பயணம் செய்கிறார். ராகுவின் மீது சனிபகவான் பார்வை விழுகிறது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார் சனி பகவான். ஆயுள்காரகன் சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், லாப ஸ்தான அதிபதி. கடந்த இரண்டரை ஆண்டு காலமாக தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்த சனிபவான் இனி லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த பயணம் மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்த்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இந்த சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய லாபங்களையும் நன்மைகளையும் தரப்போகிறது. குறிப்பாக அஸ்வினி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் என்று பாடப்போகிறீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் எளிதாக கையாளுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி இடையேயான உறவில் அன்பும் நேசமும் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கூடி வரும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் உற்சாகத்துடனும் சிறப்பாகவும் செயல்படுவீர்கள்.
மேஷ ராசியில் பரணி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். யாரை நம்பியும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். திரும்ப வாங்குவது என்பது கனவிலும் நிறைவேறாமல் போய் விடும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களைத் தேடி உயர்பதவிகள் தேடி வரும். கோடி கோடியாக பணம் வீடு தேடி வரப்போகிறது. பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. அரசியல் துறையில் இருப்பவர்கள் வெற்றிக்கனியை ருசிக்கப்போகிறீர்கள். இந்த சனி பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்கும். கல்வித்துறையில் மாணவர்கள் சாதிக்கப்போகிறீர்கள்.
மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதத்தில் பிறந்த உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களின் திறமை பளிச்சிடும். பதவிகள் தேடி வரும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் மீண்டும் வீடு வந்து சேரும். உங்களின் பேச்சில் வசீகரம் அதிகரிக்கும். குருவின் ஆசியும் அருளும் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications