வாழ்க்கையை புரட்டி போடும்.. இந்த ராசிக்கு யோசிக்காத நாட்கள் வரப்போகுது.. சனிப்பெயர்ச்சி பலன்
சென்னை; 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி மீனா ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
ஜோதிடத்தில் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு பெரிய பலம் சனிக்கு உண்டு. அது சிறு நகர்வு. சனியின் சிறு நகர்வும் கூட ஒருவரின் வாழ்க்கையை புரட்டி போடும் குணம் கொண்டது. சனி ஒருவரை தூக்கி வளர்க்கவும் செய்யவும்.. தூக்கி மிதிக்கவும் செய்யவும்.

அது என்ன வக்ர பெயர்ச்சி: அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள். தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார்.
இவர்தான் இந்த முறை வக்கிர பெயர்ச்சி அடைய போகிறார். கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.
சனி எந்த திசையில் செல்கிறார் .. உங்கள் ராசிக்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்து உங்களின் வாழ்க்கை மேலே போக போகிறதா கீழே வீழ போகிறதா என்று பார்த்து விடலாம். சனியின் மூலம் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள், வீழ்ந்தவர்களுக்கு இருக்கிறார்கள். அப்படி பட்ட சனிதான் தற்போது வக்ர பெயர்ச்சி அடைகிறார் .
பலன்கள்; 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி மீனா ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம். போக்குவரத்தில் கவனமாக இருங்கள்.நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.
கணவன் மனைவி அந்யோனியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும்.
உங்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் பின்வரும் நல்ல விஷயங்களும் நடக்கும். உங்களின் ஆரோக்கியம் சரியாகும். இத்தனை காலம் நீங்கள் உடல் ரீதியாக பட்ட கஷ்டங்கள் எல்லாம் சரியாகும்.
பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும். அதாவது வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் குறையும்.












Click it and Unblock the Notifications