Sani Peyarchi: அஷ்டமசனியில் இருந்து தப்பிக்கும் கடக ராசி.. சனிப்பெயர்ச்சியில் கிடைக்கும் பலன்கள்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் [Kadagam Sani peyarchi palan]
கடக ராசியினருக்கு யோகம் உண்டாகும் காலகட்டம். அஷ்டமத்தில் இருந்து வந்த சனி பகவான் விலகுகிறார். 8 ஆம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் 9 ஆம் இடத்துக்குச் செல்கிறார். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, பெற்றோர் பெரியோரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். பூர்வீக சொத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் இடத்தை ஆக்கிரமிப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

ஆரோக்கியம்
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். துணை விஷயத்தில் ஹார்மோன் பிரச்சனைகள், பிரஷர் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வாகனத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் இருந்து கேது உங்கள் ராசிக்கு வருவதால் தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிம்மதியாக தூங்குவது நன்மை பயக்கும். ஏற்றமும், அனுகூலமும் காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். பிரிந்த தம்பதி மீண்டும் சேரும் யோகம் உண்டாகும்.
பிரச்சனைகள் தீரும்
வழக்குகள், போலீஸ், கேஸ், ஜெயில், பஞ்சாயத்து என எல்லா பிரச்சனைகளுக்கும் சென்றவர்கள் கூட திடீரென ஒன்று சேரும் யோகம் உண்டாகும். யாரெல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தினார்களோ அவர்கள் எல்லாரும் விலகும் சூழல் ஏற்படும். துணை விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அனுகூலம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும்.
தொழிலில் முன்னேற்றம்
பெற்றோர், பெரியோருக்கும் உங்களுக்கும் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும், விவாகரத்து கிடைக்கும். திருமணத்தில் இருந்த பாதிப்புகள் செட்டிலாகும். மறுமணத்திற்கான யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம்.
பரிகாரம்
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வது அனைத்து விதமான பாதிப்புகளில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும். மாதம் ஒரு சனிக்கிழமை விநாயகர் வழிபாடு செய்வது, காரியசித்தி மாலையை படிப்பது கேட்பது ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய யோகமும், அனுகூலமும் காணப்படும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். உங்களை ஏளனப்படுத்தியவர்கள் கூட உங்களிடம் வந்து நிற்கும் சூழல் ஏற்படும்.
-
ஆனி மாத பலன்: துலாம் ராசிக்கு பத்ர ராஜயோகத்தால் வரும் அதிர்ஷ்டம்.. என்னென்ன பலன்கள்? -
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
ஆனி மாத பலன் 2026: கும்ப ராசிக்கு ராஜயோகம், தொழில் வளர்ச்சி மற்றும் பணவரவு அதிகரிப்பு! -
ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. தொட்டது துலங்கும் யோகம் -
ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. குரு சுக்கிரனால் வரப்போகும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: விருச்சிகம் ராசிக்கு 15 வருடங்களுக்கு பிறகும் நல்ல காலம்.. தேடி வரும் யோகங்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications