சனிப்பெயர்ச்சி: பணத்தை அள்ளும் மிதுனம், கடகம் ராசி.. கொட்டிக் கொடுக்கப் போகும் சனி பகவான்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். மற்ற கிரகங்களை விட ராசியில் அதிக காலம் பயணிப்பது சனி பகவான் தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுனம், கடகம் ராசிகளுக்கு பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொகுப்பில் சனிப்பெயர்ச்சியால் மிதுனம் மற்றும் கடக ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றம் குறித்து பார்க்கலாம்.

மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்களுக்கு 9 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் 10 ஆம் இடத்துக்கு மாறுகிறார். தொழில் அமைப்புகளில் சில மாற்றம் ஏற்படும். எதிர்காலத்தில் இந்த மாற்றம் அபரிமிதமான பலன்களைத் தரும். அடுத்த சனிப்பெயர்ச்சியில் 11 ஆம் இடத்துக்கு வரும்போது லாபம் வர வேண்டும் என்பதற்காக அதற்கான அடித்தளத்தை இந்த சனிப்பெயர்ச்சியில் அமைத்துக் கொடுப்பார்.
வேலை மாற்றம், புதிய வேலை, தொழில், வியாபாரம் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். அடுத்த இரண்டரை ஆண்டுகள் கழித்து வளர்ச்சிக்கான அஸ்திவாரம் இந்த சனிப்பெயர்ச்சியில் கிடைக்கும் யோகம் உண்டாகும். பட்டம், பதவி, கல்வி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற அமைப்புகள் உண்டாகும். சனிப்பெயர்ச்சியைத் தொடர்ந்து குருப்பெயர்ச்சி நடப்பதால் திருமண யோகம் உண்டாகும்.
குறிப்பாக காதலிப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். அக்டோபர், நவம்பர் மாதத்திற்குப் பிறகு மிதுன ராசியினருக்கு திருமணம் நடக்கும். பெரிய அளவில் எந்த சோதனையும் இருக்காது. படிப்படியாக நல்ல மாற்றம் உண்டாகும். வயதுக்கு ஏற்ப பெரிய நன்மைகள் இருக்கக்கூடிய யோகமான காலமாக உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி இருக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுவரை அஷ்டமத்து சனியால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். துக்கம், துயரம், வம்பு, வழக்கு, அசிங்கம், பிரிவு, நோய், கேவலம், இழப்பு, கடன் போன்ற எல்லா பாதிப்புகளையும் சந்தித்திருப்பார்கள். தொழிலில் நஷ்டம், மதிப்பற்ற தன்மை, விரையம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். இனி உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது.
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு கஷ்டங்களில் இருந்து விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும். புனர்பூசம், ஆயில்யம், பூசம் ஆகிய 3 நட்சத்திரக்காரர்களுககு பெரிய விடிவு காலம் கிடைக்கும். பணம், உறவு, தாய், தந்தை, நண்பர், கணவன், மனைவி யார் என புரிந்திருப்பீர்கள். கடன் பிரச்சனைகள் போன்றவற்றை அறிந்திருப்பீர்கள். உயிருக்கு உயிரான உறவுகள் மூலம் பிரிவு, இழப்புகளைப் பற்றி புரிந்திருப்பீர்கள். இனிமேல் உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கப் போகிறது. 30 வருடத்துக்கு யோக காலமாக இருக்கும்.
பண வரவு உண்டாகும். வேலை மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை, தொழில் மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்றாக சேரும். குடும்பம் ஒன்றாக சேரும். வாழ்க்கை அருமையாக இருக்கும். 100 சதவீதம் கெட்டவைகள் நீங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பணம், லாபம் என்று மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications