Makaram Rasi Palan: மகரம் ராசிக்கு மெகா ட்விஸ்ட்.. சனி பகவானால் சூப்பர் ப்ரோமோஷன்
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மகரம் ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் மகரம் ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
மகரம்
மகரம் ராசிக்கு சனி பகவான் தான் ராசி நாதன். உங்கள் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்திற்கும் சனி பகவான் தான் அதிபதி. அவர் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் வக்ர கதியில் இருந்து வருகிறார். இது இயல்பை மீறிய பயன்களை கொடுக்கும். காரிய தடைகள், பிரச்சனைகள், மனக்கவலைகள், குழப்பம் கொடுத்திருக்கும்.
ஆரோக்கியம்
தற்போது அவர் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த பலன்கள் அப்படியே தலைகீழாக மாறி நல்ல பலன்கள் கிடைக்க போகிறது. கடந்த காலங்களில் தடைபட்ட அனைத்தும் நல்லபடியாக நடக்கும். முயற்சிகள் அனைத்திற்கும் கைமேல் பலன் கிடைக்கும். மனதில் நினைத்த அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.
தெளிவு
மனதில் தெளிவு பிறந்து உற்சாகமாக செயல்படுவீர்கள். தெளிவான திட்டமிடல்களால் பெரிய சாதனை படைப்பீர்கள். பழைய பாக்கி வசூலாகும். பண வரவு சீராக இருக்கும். உங்கள் வாக்கு ஸ்தானம் பலமடையும். உங்கள் வார்த்தைக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அடுத்தடுத்த நல்ல காரியங்களால் மனம் திருப்தியடையும்.
குடும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் காணப்படும். உங்கள் குழந்தையின் கல்வி, வேலை வாய்ப்பில் நல்ல தகவல் கிடைக்கும். சுப காரிய தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கும்.
உத்யோகம்
உத்யோகத்தில் சக ஊழியர்களின் உதவி இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் காணப்படும். அரசு பணிக்கான போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். நிம்மதியான ஓய்வு, தூக்கம் கிடைக்கும். வீடு, நிலம், வண்டி, வாகனம் போன்ற போன்ற சொத்து சேர்க்கை இருக்கும். முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications