சனியின் அருளால் ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்.. தங்கம், பணம், வெளிநாடு கன்ஃபார்ம்.. என்ஜாய்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது மீன மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி என்பது 9க்கும், 10க்கும் உரியவர். உங்களுக்கு ராஜயோகத்தை தரக்கூடிய கிரகம் சனி. உங்கள் ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சனி வக்ர நிலையில் அமர்ந்திருக்கிறார். இதுவரை நல்ல பலன்களைக் கொடுத்திருந்தால் இனி கெடும் நிலை ஏற்படும், இதுவரை கொடுக்கவே இல்லை என்றால் சனி பகவான் வாரி வழங்கும் காலகட்டமாக இருக்கும்.
ஏற்றம்
வேலை இல்லை, பிரச்சனை, செட்டிலாகவில்லை என்று வருத்தப்படுபவர்கள் ஏற்றம் பெறும் காலகட்டமாக இருக்கும். வளர்ச்சிகளைக் கொடுக்கும் நேரமாக இருக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம், டென்சன், அலைச்சல், வேலைப் பளு உண்டாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நிச்சயமாக இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த விஷயங்களில் இருந்து அனைத்து தடைகளும் பரிபூரணமாக நீங்கும்.
வெளிநாடு யோகம்
வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு முறை ஜாதகம் பார்த்துக் கொள்வது நல்லது. சனி மூன்றாம் பார்வையாக ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் தலை சார்ந்த விஷயங்களில் பாதிப்பு, குழப்பமான நிலை, தலைவலி போன்றவை இருந்த நிலை எல்லாம் மாறி தெளிவு பெறுவீர்கள்.
பூர்வ புண்ணியம்
தனது சமசப்தம பார்வையாக சனி பகவான் 5 ஆம் இடத்தைப் பார்க்கிறார். யோகத்தைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பூர்வ புண்ணியங்கள் கிடைக்கும் நேரமாக இருக்கும். பூர்வீகக்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் விடுதலை கிடைக்கும். சுமூகமான நிலை ஏற்படும். படிப்பு சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள், தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தில் இருந்த தடை நிவர்த்தியாகும்.
குழந்தை பாக்கியம்
வரும் 138 நாட்களும் வளர்ச்சியும், முன்னேற்றமும் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். சனி குருவின் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலமான அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 வரையிலான காலகட்டத்தில் நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி 10 ஆம் பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாடு யோகம்
வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று இருப்பவர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். சனியும், குருவும் இணைந்து 8 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வெளிநாட்டுக்குச் சென்று வரும் பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டம், பண வரவு கொட்டக்கூடிய காலகட்டமாக இருக்கும். இனிமேல் நல்லவை மட்டுமே நடக்கும் காலகட்டமாக இந்த சனி வக்ர பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.
-
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications