சனி வக்ர பெயர்ச்சி: துலாம் ராசிக்கு பெண் மூலம் வரப்போகும் ஆபத்து
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். ஜூலை மாதம் முதல் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், ஏற்றங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கும். வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. பழைய பாக்கி வசூலாகும். வெளிநாடு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் தீராத பிரச்ச னைகள் தீர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத இடத்தில் இருந்து திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
சொந்த வீடு
சொந்த வீடு கனவு நனவாகும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். கடந்த காலத்தில் உங்களுக்கு கடுமையாக ஏற்பட்ட பாதிப்புகள் பனி போல விலகும். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள், கடன் நெருக்கடி குறையும். பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களுடன் மீண்டும் இணைவார்கள். பழைய பாக்கி வசூலாகும். முதலீட்டில் லாபம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
வீண் விரயம்
வீண் விரயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும். சிறுநீரகம், கழிவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி, அதில் உடனடியாக பழுது ஏற்படும். பெண்களாக இருந்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் அவசியம். வாழ்க்கை துணை முகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும்.
விபத்துகள்
எதிர் பாலினத்தவரால் அவமானம், பிரச்சனை ஏற்படும். 8 ஆம் இடத்தில் சுக்கிரன், 12 ஆம் இடத்தில் செவ்வாய் அமர போகிறார்கள். இது அவ்வளவு நல்ல அமைப்பு இல்லை. சகோதர இழப்புகள், மறைவு பகுதிகளில் பாதிப்பு, சாலை விபத்துகள், நிலம் உள்ளிட்ட வழக்குகளில் பாதிப்பு, உறவு பிரிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
வண்டி, வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் வேண்டும். முக்கியமாக இரவு நேர பயணங்களில் அதிக எச்சரிக்கை வேண்டும். வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனம் வேண்டும். உணவு கட்டுப்பாடு அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்
கால் பாதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். சகோதர உறவுகளுடன் பிரச்சனைகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் மோதல் போக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகள் நீங்க சுவாமி மலை முருகப் பெருமானை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications