சதுர்கிரக யோகத்தால் துலாம் ராசிக்கு கொட்டும் யோகம்.. தீராத பிரச்னைகளுக்கு குட்பை

Subscribe to Oneindia Tamil

சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்கள் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீனம் ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின்சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது துலாம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

மீனம் ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

Astrology Thulam 4 planets

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீட்சமாக உள்ளார். இது நீட்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.

துலாம் ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட நீங்கள் எதிலும் நீதி, நேர்மையுடன் நியாயமாக இருப்பீர்கள். மனதில் பட்டதை சரி, தவறு எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசுபவர்களாக இருப்பார்கள்.

கடின உழைப்பை செலுத்தினாலும் வரவை மீறிய செலவாலும், தொடர் பிரச்னைகளாலும் பல்வேறு சங்கடங்களை அனுபவித்திருப்பீர்கள். உறவினர்கள் கூட பகையாளிகளாக மாறியிருப்பார்கள். உத்யோகம், குடும்பம் எல்லாவற்றிலும் ஏராளமான தடைக்கற்கள் வந்திருக்கும். தற்போது அந்த தடைக்கற்கள் எல்லாம் தவிடு பொடியாக உள்ளன. உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்ச நிலையில் இருப்பது நல்ல பலன்களை தரப்போகிறது.

தொழிலில் நீங்கள் செய்கிற முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பளம் உயர்வு நிச்சயம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி பணியிட மாற்றம் இருக்கும். உங்கள் தகுதிக்கு ஏற்ற நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். திறமைக்கேற்ற அனைத்து அங்கீகாரமும் கிடைக்கும்.

திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி, இந்த காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்விக சொத்துகளால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவதற்கு, விற்பதற்கு இது உகந்த காலமாக இருக்கும்.

சட்ட ரீதியான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிரிகளுடன் இருந்த பிரச்னைகள் நீங்கும். நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவுகள் குறைந்து ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக தீராத பிரச்னைகள் கூட இந்த காலத்தில் தீரும். கல்வியில் இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றம் இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் பயணம் மேற்கொள்வீர்கள். கடன் சுமை குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+