Aadi Matha Rasi Palan 2025 Simmam: சிம்ம ராசிக்கு வரும் சிக்கல்.. தலை தப்பிக்க ஒரே வழி இதுதான்
ஆடி மாத பலன் : ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம் ஆடி மாத பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இனம் புரியாத பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்திருப்பார்கள். பாக்கியங்களைத் தரக்கூடிய இடத்தில் ஏதோ ஒரு பாதிப்பை கேது கொடுத்துக் கொண்டிருந்திருக்கும். இந்த மாதத்தில் ராசிநாதன் 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ராசிக்குள் கேதுவும், செவ்வாயும் இணைந்திருக்கின்றனர். 11 ஆம் வீட்டில் குரு இருக்கிறார். 10 ஆம் வீட்டு அதிபதியும், 11 ஆம் வீட்டு அதிபதியும் இயங்குவதற்கான வாய்ப்புள்ளது.
காதல் அதிகரிக்கும்
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை சுகபோகமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். 12 ஆம் வீடு என்பது அயன சயன போகம். அந்த இடம் வலுப்பதால் காதல் அதிகரிக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனை, கடன், வேலையில் பிரச்சனை, உடல்நலப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி துணைவியின் மீது காதல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
தொழிலில் லாபம்
தொழில் மூலமாக அபரிமிதமான லாபம் கிடைக்கும். பெண்கள் மூலமாக ஆதாயம், அனுகூலம் கிடைக்கும். ராசிநாதன் 12 ஆம் இடத்தில் இருப்பதால் ரகசியத்தைப் பாதுகாப்பாக இருப்பது நல்லது. எதிர்பாலினத்தவர்களால் அசிங்கம், அவமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆண்களாக இருந்தால் பெண்களிடமும், பெண்களாக இருந்தால் ஆண்களும் மிகுந்த கவனம் தேவை.
துணைக்காக செலவு
லாபாதிபதி 12 ஆம் இடத்தில் இருப்பதால் துணைக்காக சில செலவுகளைச் செய்வீர்கள். 10 ஆம் அதிபதி 11 ஆம் வீட்டில் அமரப் போகிறார். அங்கு குருவும் இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் மூலமாக லாபம் பெறுவீர்கள். இடமாற்றம் உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் யோகம் உண்டாகும். வழிபாடு செய்வீர்கள். ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சித்தர்கள் ஆசிர்வாதம், குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
வழிபாடு
உள்ளுணர்வு சக்தி அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். அனைத்து விதமான சூழ்நிலைகளையும் அசால்டாக கடந்து செல்வீர்கள். அம்பிகை வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். மூளையின் வேகம் அதிகரிக்கும். அதன் மூலம் அனுகூலம், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன், மனைவி சேரும் அமைப்பு உண்டாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்பிக்கை அதிகரிக்கும்.
முன்னேற்றம்
குடும்பத்தோடு இணக்கம் உண்டாகும். தனிமைக்குள் செல்லும் வாய்ப்பும் ஏற்படும். பணம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிலம், வீடு, வாகனம், சுகம் சார்ந்த பெரிய மாற்றம் நிகழும். சனி வக்கிரமாவதால் சில கண்டங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லாமல் கோபம், விரக்தி ஏற்படும்.
கோபம்
வேலைகளில் கோபம் வருவதற்கான வாய்ப்புள்ளது. எடுத்த காரியங்களில் தடை, அவமானம் வருவதற்கான வாய்ப்புள்ளது. மனதால் உங்களுடைய தன்மையில் இருந்து தவறாமல் இருப்பது நல்லது. வேலை பார்க்கும் இடங்களில் பிரச்சனைகள், சோம்பல் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. ஆனால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications