Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. 7 நாட்களில் நடக்கும் மாற்றம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. லாபமும், சந்தோஷமும், அனுகூலமும் கட்டாயம் ஏற்படும். உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், படிப்பு மாற்றம், இடமாற்றம், வியாபார மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும் உங்களுக்கு ஏற்படும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
செல்வாக்கு கூடும்
துணையுடன் இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். கோளார் பதிகத்தை சொல்லி வருவது சர்ப்ப கிரகங்களின் தோஷங்களில் இருந்து நிவர்த்தியாகும். சேரக்கூடாத கிரகங்கள் எல்லாம் இப்போது சேர்ந்திருக்கிறது. சனி பார்வையில் இருப்பதாலும், ராசி லக்னத்தில் கேது இருப்பதாலும் வேலை போகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
மன உறுதி அவசியம்
மேலதிகாரிகளால் அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு எலும்புகள் பாதிப்பு ஏற்படும். இந்த வேலையே வேண்டாம் என்கிறத எண்ணம் தோன்றும். பிள்ளைகள், தந்தை போன்றோர் வெளியூர் போகும் நேரம் ஏற்படும். உங்களுடைய மன உறுதி அதிகம் தேவைப்படும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு கண்டம் உண்டாகும்.
ஆரோக்கியம்
சிம்ம ராசியினர் கவனமாக இருப்பது நல்லது. புதன், சுக்கிரன் பெரிய வெற்றியை கண்டிப்பாக கொடுப்பார். வீட்டுக் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உங்களுடைய ஆரோக்கியம், குடும்பத்தினருடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. அலர்ஜி, சளி தொந்தரவு, சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருப்பது நல்லது. ராஜகணபதி, பெருமாள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications